Connect with us

CINEMA

‘எதிர்நீச்சல்’ சீரியல் ரேணுகாவா இது?… பீச்சில் மாடர்ன் உடையில் வெளியிட்ட வீடியோ… ஷாக்கில் ரசிகர்கள்…

சின்னத்திரையில் பிரபல ஆங்கராக இருந்து வருபவர் டிடி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வரும் திவ்யதர்ஷினி நீலகண்டன். இவரை போலவே இவரது சகோதரியான பிரியதர்ஷினியும் சின்னத்திரையில் பிரபலமாக இருந்து வருகிறார். சகோதரியை போலவே சிறு வயதிலிருந்தே பன்முகத்தன்மை கொண்டவராக இருந்து வருகிறார் பிரியதர்ஷினி.

   

தங்கை திவ்யதர்ஷினி போலவே அக்கா பிரியதர்ஷினியும்  சிறந்த ஆங்கராக வலம் வந்தவர்.  தமிழ் திரைப்படத் துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பிரியதர்ஷினி நாடகங்களிலும் நடித்துள்ளார். ‘மானாட மயிலாட’ ஷோவில் பங்கேற்று தனது நடன திறமையை வெளிப்படுத்தி விருது வாங்கியிருக்கிறார். விஜய் டிவியில் பிரபல ஆங்கராக இருந்து அவரும் டிடி யின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் தான் முடிந்துள்ளது.

ஆனால் அவரது அக்காவான பிரியதர்ஷினியின் திருமண வாழ்வு இனிமையாக சென்று கொண்டுள்ளது. பிரியதர்ஷினிக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கில மொழிகள் பேசத் தெரியும். இவர் பல டிவி மற்றும் நிகழ்ச்சிகளை கலகலப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். இவர் ரமணா என்பவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

தற்பொழுது இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகா கதாபாத்திரத்தில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் பிரியதர்ஷினி. இவர் தற்பொழுது பீச்சில் மாடர்ன் உடையில் எடுத்த வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த விடியோவை பார்த்த ரசிகர்கள் எதிர்நீச்சல் சீரியல் ரேணுகாவா இது? என்று ஷாக்கில் உள்ளனர். இதோ அந்த வீடியோ…

Continue Reading

More in CINEMA

To Top