‘இதனால் தான் நான் கல்யாணம் பண்ணிக்கல’.. நேர்காணலில் முதல் முறையாக மனம் திறந்த நடிகை மும்தாஜ்..

By Deepika

Updated on:

1999 ஆம் ஆண்டு வெளியான மோனிஷா என் மோனாலிசா படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் மும்தாஜ். அதன் பின் விஜய் நடித்த குஷி படத்தில் நடித்தது மூலம் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார்.

   

தொடர்ந்து மலபார் போலீஸ், உனக்காக எல்லாம் உனக்காக, பட்ஜெட் பத்மநாதன், லூட்டி, சொன்னால் தான் காதலா, வேதம், சாக்லெட் என்று பல திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்தார். கவர்ச்சி நடிகையாக சினிமாவில் கலக்கிவந்த மும்தாஜ் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2வது சீசனிலும் கலந்துகொண்டிருந்தார்.

இந்தநிலையில் இஸ்லாம் மீது அதிக பற்று கொண்டு அதை பின்பற்றி வரும் மும்தாஜ் சினிமாவுக்கு டாட்டா சொல்லிவிட்டார். இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் பல விஷயங்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, நான் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்துள்ளேன், இருந்தாலும் அது குறித்து எனக்கு ஞானம் இல்லாமல் இருந்தது.

இப்போது குரான் படிக்க படிக்க அதில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் எனக்கு புரிய தொடங்கியது, அதன் பின் என்னுள் பல மாற்றங்கள் நிகழ்ந்தது. அதேபோல் எனக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசைகள் இருந்தது, ஆனால் எனக்கு தசை அழற்சி நோய் உள்ளது. நான் பல நாட்கள் வலியுடன் இருந்துள்ளேன். நான் ஒருவரை திருமணம் செய்து அவர்களுக்கு கஷ்டம் கொடுக்க விரும்பவில்லை.

அதேபோல் குழந்தை வேண்டும் எனவும் விரும்பியுள்ளேன், ஆனால் எனக்கு கொடுத்து வைக்கவில்லை. என்னால் தத்தெடுத்து கொள்ளவும் முடியவில்லை என கண்கலங்கி கூறியுள்ளார் நடிகை மும்தாஜ்.

author avatar
Deepika