Categories: சினிமா

சுந்தர்சி வைத்த பார்ட்டி.. மீனா முதல் விஷால் வரை கலந்து கொண்ட பிரபலங்கள்.. வெளியான புகைப்படங்கள்..!

Spread the love

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சுந்தர் சி. இவருடைய இயக்கத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, மனோபாலா மற்றும் மணிவண்ணன் உள்ளிட்ட பலருடைய நடிப்பில் உருவான திரைப்படம் தான் மதகஜராஜா.

இந்த திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு ரிலீஸ் செய்ய முடியாமல் போனதால் சுமார் 12 வருடங்களுக்கு பிறகு இந்த ஆண்டு பொங்கலுக்கு படம் வெளியானது.

விஜய் ஆண்டனி இசையில் இந்த திரைப்படம் உருவாகி இருந்த நிலையில் படம் வெளியாகி வெற்றி படமாக மாறி உள்ளது. 13 கோடி படத்தின் பட்ஜெட்டாக இருந்த நிலையில் இதுவரை திரைப்படம் 25 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இதனிடையே சுந்தர் சி கடந்த ஜனவரி 21ஆம் தேதி தனது 57வது பிறந்த நாளை கொண்டாடினார். மதகஜராஜா வெற்றி மற்றும் தனது பிறந்தநாள் என இரட்டிப்பு மகிழ்ச்சியிலிருந்து சுந்தர் சி தன்னுடைய திரை துறை நண்பர்களுக்கு ஒரு பார்ட்டி கொடுத்துள்ளார்.

இந்த பார்ட்டியில் சுந்தர் சி, அவரது மனைவி குஷ்பூ, மகள்கள் இருவரும் கலந்து கொண்டனர். மேலும் மீனா, விஷால், யோகி பாபு, தொகுப்பாளினி டிடி, ஐஸ்வர்யா ராஜேஷ், சங்கீதா, நடன இயக்குனர் பிருந்தா, இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இது தொடர்பான புகைப்படங்களை நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் நடிகர் விஷால் மீனாவின் தோளின் மீது கை வைத்து நின்று கொண்டிருக்கிறார்.

பார்ட்டியில் செம கும்மாளம் போட்ட நிலையில் அது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து மீனா, 2025 ஆம் ஆண்டில் முதல் முறையாக ஒன்றுகூடி உள்ளோம் என்று கேப்ஷன் போட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Nanthini

Recent Posts

மாவட்ட அரசியலில் இருந்து விலகல்…. மகனுக்காக KN நேரு எடுத்த அந்த ஒரு முடிவு…. அலறும் அறிவாலயம்….!

திருச்சி திமுகவில் முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேருவின் மகனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு வழங்கப்படவில்லை…

16 minutes ago

கரூர் இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்…. தவெகவுக்கு செக் வைக்க செந்தில் பாலாஜி போட்ட “சீக்ரெட்” பிளான்… காலையிலேயே பரபரப்பு..!

கரூர் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தை வீழ்த்துவதற்காக திமுக மூத்த தலைவருமான செந்தில்பாலாஜி தீவிர தேர்தல் உத்திகளை வகுத்து…

19 minutes ago

ஐயோ… என் குழந்தையை காப்பாத்துங்க… பெண்ணின் அலறல் சத்தம்… நடுரோட்டில் நடந்த மிரள வைக்கும் அதிர்ச்சி சம்பவம்… பதறும் CCTV வீடியோ…!

தெருவில் தன் குழந்தையுடன் நடந்து சென்ற பெண்ணை ஒருவன் திடீரென வழிமறித்துத் துன்புறுத்தியபோது, அந்த வழியாகச் சென்றவர்கள் அதைப் பொருட்படுத்தாமல்…

51 minutes ago

ரூ.75,000 கடனால் வந்த வினை…. தந்தையைக் கொன்று தம்பியே ஆடிய பயங்கர நாடகம்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம், பங்கார்பேட்டை தாலுகா விஜயநகர் லே-அவுட் பகுதியில் வசித்து வந்த 70 வயதான வெங்கடகிருஷ்ணபாபு என்பவருக்கு…

57 minutes ago

சீறிப்பாயும் வெள்ளம்…! “தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட பச்சிளம் குழந்தை…” இதயத்தை நொறுக்கும் வீடியோ வைரல்…!!

நேபாள நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டு பேரழிவு உருவாகியுள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு…

57 minutes ago

EC, HC நோ சொன்னா என்ன?… டெல்லிக்கு மேட்டர் செல்லுது…. சுப்ரீம் கோர்ட்டில் ஸ்டாலினின் பவர்ஃபுல் லீகல் மூவ்… அடுத்த பரபரப்பு….!

கொளத்தூர் தொகுதி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT தாள்களில் குளறுபடிகள் நடந்ததாகக் கூறி, 100% VVPAT தாள்களையும்…

1 மணத்தியாலம் ago