தமிழ் சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளராக கொண்டாடப்படுபவர் தான் ஏ ஆர் ரகுமான். ரோஜா திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ ஆர் ரகுமான் அதுவரை இளையராஜா கட்டுப்பாட்டில் இருந்த தமிழ் சினிமாவை மெல்ல மெல்ல ஏ ஆர் ரகுமான் எனும் இசை புயல் ஆக்கிரமித்தது. இவரை இசை அமைத்த முதல் படமே பட்டித் தொட்டி எல்லாம் பிரபலமான நிலையில் படத்தின் பாடல் காலம் கடந்தும் இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தத் திரைப்படத்திற்காக ஏ ஆர் ரகுமானுக்கு சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து மணிரத்தினத்தின் ஆஸ்தான இசையமைப்பாளராக மாறிய ரகுமான் அவர் இயக்கிய திரைப்படங்களுக்கு வரிசையாக இசையமைத்தார்.
தற்போதும் அவர் இயக்கியுள்ள தக் லைப் திரைப்படத்திற்கு இவர் தான் இசையமைத்திருக்கிறார். சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் ரகுமான் இன்றளவும் நம்பர் ஒன் இசையமைப்பாளர் என்ற அந்தஸ்தை விட்டுக் கொடுக்கவில்லை. சினிமாவில் இப்படி கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் ரகுமான் சாய்ராம் என்பவரை 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இதில் ஏ ஆர் ரகுமான் மூத்த மகள் கதீஜா தன் தந்தையைப் போலவே இசையமைப்பாளராக பணியாற்றி வருகின்றார்.
அதனைப் போலவே மகன் அமீனும் பாடகராக கலக்கி வருகின்றார். சும்மா 29 ஆண்டுகள் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த ஏ ஆர் ரகுமான் கடந்த ஆண்டு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். தற்போது சினிமாவில் முழு கவனம் செலுத்தி வரும் ஏஆர் ரகுமான் சமீபத்தில் அளித்த பேட்டியில், பிரபுதேவா நடித்த காதலன் திரைப்படத்தில் இடம்பெற்ற “ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி” இந்தப் பாடலில் முதல் வார்த்தை எழுதுவதற்கே ஒரு மாதமானது. இதைக் கேட்கும்போதே ஒரு உணர்வு மனதிற்குள் வரும். ஒரு மாசம் யோசிச்சு தான் ஃபர்ஸ்ட் லைனே வந்துச்சு என்ற ஏ ஆர் ரகுமான் கூறியுள்ள இந்த தகவல் ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…
பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…