இந்தியாவில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அப்படிப்பட்ட திட்டங்களில் முக்கியமான ஒன்றுதான் “பிஎம் விஸ்வகர்மா தையல் இயந்திர திட்டம்”. இந்த திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கி வைத்த நிலையில் பெண்களுக்கு உதவுவது தான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். இந்த திட்டத்தின் கீழ் தையல் வேலை செய்பவர்களுக்கு 15,000 இந்திய அரசால் வழங்கப்படுகின்றது. இந்த பணத்தை வைத்து புதிய தையல் இயந்திரம் வாங்கி சொந்தமாக சிறுதொழில் தொடங்க முடியும். இதனால் வீட்டில் அமர்ந்து பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். தையல் வேலை செய்பவர்கள் மட்டுமல்லாமல் தையல் தொடர்பான 18 வகையான வேலைகளை செய்பவர்களும் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும்.
இதில் ஆண் பெண் என இருவரும் அடங்குவர். தையல் இயந்திர திட்டத்தின் மூலமாக தையல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு தரமான தையல் இயந்திரம் வாங்குவதற்கு 15 ஆயிரம் ரூபாய் அரசு நிதி உதவி வழங்குகிறது. அது மட்டும் அல்லாமல் கைவினைஞர்கள், தையல்காரர்கள் மற்றும் பிற தொழிலாளர்கள் அடங்கிய 18 வகையான பாரம்பரிய வேலைகளை செய்பவர்களும் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இதனைத் தவிர இவர்களுக்கு அரசு சார்பில் நிதி உதவி மட்டுமல்லாமல் தையல் இயந்திரம் பயன்படுத்த இலவச பயிற்சியும் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி பெறும் ஒவ்வொரு விண்ணப்பதாரர்க்கும் கல்வி காலத்தில் எந்த விதமான நிதி பிரச்சனையும் ஏற்படாத வகையில் ஒரு நாளைக்கு 500 ரூபாய் வழங்கப்படுகின்றது.
இந்த திட்டத்தின் மூலம் சமுதாயத்தின் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிகாரம் அளிக்க முடியும். நவீன தையல் தொழில்நுட்பங்களை கற்று தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கு 15 நாட்கள் இலவச பயிற்சியும் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் தொழிலை மேலும் விரிவுபடுத்த விரும்பினால் நீங்கள் மூன்று லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம். அந்த கடனுக்கான வட்டி விகிதமும் மிக குறைவு தான். மேலும் அரசு சார்பில் மானியமும் வழங்கப்படும். இதனால் அந்த கடனை திருப்பி செலுத்துவது எளிதானதாக இருக்கும்.
இந்த திட்டம் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வறுமையை குறைத்து அவர்களை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் பலன்களை நீங்களும் பெற விரும்பினால் உங்களுக்கு சில முக்கியமான தகுதி நிபந்தனைகள் உள்ளது. அதாவது விண்ணப்பதாரர் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். இந்தியாவில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் பாரம்பரிய தையல் தொழிலில் இருப்பது கட்டாயம். எனவே தையல் வேலை செய்து கொண்டிருக்க வேண்டும்.
என்னப்பா தாரரின் குடும்பத்தில் யாரும் அரசு வேலையில் இருக்கக் கூடாது. மேலும் இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெற ஆதார் அட்டை, வருமான சான்றிதழ் , முகவரி ஆதாரம், மொபைல் எண், வங்கி பாஸ்புக் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்ற ஆவணங்கள் தேவை. இந்தத் திட்டத்தில் பயன்பெற பிஎம் விஸ்வகர்மா தையல் இயந்திர திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குச் சென்று வேண்டிய விவரங்களையும் ஆவணங்களையும் பூர்த்தி செய்து எளிதில் விண்ணப்பிக்கலாம்.
தமிழக அரசியலில் தவெக - காங்கிரஸ் கூட்டணியிடையே வெடித்துள்ள பிரதமர் வேட்பாளர் குறித்த வார்த்தை மோதல் தற்சமயம் பெரும் பரபரப்பை…
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள பஹேடி காவல் எல்லைக்குட்பட்ட நகரி பைபாஸ் சாலையில் நடுரோட்டில் வைத்து நடந்த…
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள பிரபலமான தாமெல் பகுதியில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.…
அதிமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகச் சிறப்பாகச் செயல்பட்ட K.A. செங்கோட்டையனின் துறை விரைவில் மீண்டும் மாற்றப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…
தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சியால் திமுக சுணக்கமடைந்துவிட்டது என்ற விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், தொண்டர்கள் மத்தியில் தேக்கநிலையைப் போக்கி உற்சாகத்தை…
மத்தியப் பிரதேச மாநிலம், உஜ்ஜயினியில் உள்ள புகழ்பெற்ற ராம் காட் பகுதிக்கு சென்ற ஒரு பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சிகரமான சம்பவம்…