அந்தக் காலத்திலேயே சொந்த ஹெலிகாப்டர் வாங்கி கெத்து காட்டிய நடிகை.. அம்மனுக்கே அடையாளம் கொடுத்த புன்னகை அரசி

By John

Updated on:

KR vijaya

இன்று தமிழ் சினிமாவில் கோடிகளில் சம்பளம் வாங்கி ஆடம்பர பங்களா, ஹோட்டல், ரியல் எஸ்டேட் என தலைமுறை தலைமுறைக்குமாக சொத்து சேர்த்து வைத்திருக்கு நடிகர்களுக்கு மத்தியில் 1960-70 களிலேயே புகழின் உச்சியில் இருந்து சொந்தமாக ஹெலிகாப்டரையே வாங்கி கெத்து காட்டிய நடிகை தான் புன்னகை அரசி கே.ஆர்.விஜயா.

தான் நடிக்கும் ஒவ்வொரு கேரக்டர்களிலும் தனி முத்திரையைப் பதித்து ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர். அம்மன் வேடம் என்றாலே கூப்பிடுங்க கே.ஆர்.விஜயா என்று சொல்லும் அளவிற்கு பெண் கடவுள்களுக்கு அடையாளம் கொடுத்தவர். இவர் நடித்த பக்திப் படங்களில் தியேட்டர்களில் பெண்களை சாமியாட வைத்து அந்த கேரக்டர்களுக்கே வடிவம் கொடுத்தவர்.

   
KR Vijaya
KR Vijaya in a still from the Tamil movie Nilavil Mazhai

வறுமையான குடும்பத்தில் பிறந்து, பிழைப்புக்காக நாடகங்களில் நடித்து, தற்செயலாக திரையுலகில் நுழைந்து, பின் தமிழ்த்திரையுலகில் முன்னணி நடிகையான கே.ஆர்.விஜயா செய்துள்ள சாதனைகளை, இதர தமிழ்நடிகைகளால் இன்றளவும் முறியடிக்க இயலவில்லை.

தமிழ் சினிமாவில் அதிகப் படங்களில் கதாநாயகியாக நடித்த பெருமை இவரையே சேரும்.  மேலும் இன்று லேடீ சூப்பர் ஸ்டார் நயன்தாரா சொந்தமாக பிளைட் வைத்திருப்பது போன்று, அந்தக் காலத்திலேயே கே.ஆர்.விஜயா சொந்தமாக ஹெலிகாப்டர் வைத்திருந்தார் என்றால் அவரின் புகழை பார்த்துக் கொள்ளுங்கள். மேலும் ஆடம்பர பங்களா, சொகுசு கார்கள், குதிரை வளர்ப்பு என ஆடம்பரத்தில் ஜொலித்த நடிகையும் இவரே.

பட டைட்டிலால் அர்ஜுனுக்கு அதுக்கு நோ சொன்ன தமிழக அரசு.. தேச பக்தி நாயகனுக்கு ஏற்பட்ட இழப்பு

தனது சொந்த செலவில் முதன் முறையாக தான் நடித்த “நத்தையில் முத்து” என்ற படத்தின் வெற்றி விழாவினைக் கொண்டாடிய முதல் தமிழ் நடிகை இவரே.. என்.டி.ஆர் உள்ளிட்ட திரையுலக ஜாம்பவான்கள் அனைவரும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமல்லாது இப்போதிருக்கும் நடிகைகளுக்கு முன்னுதாரணமாக தனியாக கதையின் நாயகியாக சபதம், வாயாடி, திருடி, ரோஷக்காரி, மேயர் மீனாட்சி, அன்னை அபிராமி போன்ற படங்களில் நடித்து அந்தக் கால கட்டத்திலேயே புகழ் பெற்றார்.

kr vijaya
kr vijaya 1

முதல்நிலை நாயகியாக பிரபலமாக பல படங்களில் நடித்த காலகட்டத்திலேயே, இரண்டாம்நிலை நாயகியாகவும், நடித்தவர். தன் கதாபாத்திரம் பிடித்துவிட்டால் போதும் படத்தில் நடித்துவிடுவார். இப்படி நடித்தால் தன்இமேஜ் பாதிக்குமே என்றெல்லாம் ஒருபோதும் கவலைப்படாதவர்.

பின்னாளில் தனது கணவருக்கு மூன்றாம் தாரமாக மணமுடித்தாலும் கண்ணியமான வாழ்க்கையை நடத்தியவர்.  திருமணத்திற்குப் பிறகு நடிக்க வாய்ப்பு வந்தும், மறுத்து, படங்களில் தொடர்ந்து நடிக்க கணவருடைய முழு ஆதரவும், ஊக்கமும் கிடைத்த பின்னரே நடிக்க வந்தவர்.

author avatar