நடிகர் அர்ஜுன் பட தலைப்புக்கு ஆப்பு வைத்த தமிழக அரசு.. Action King-க்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு..

By John

Updated on:

தேச பக்திப் படங்களில் நடித்து நம்மை விடுதலைப் போராட்ட காலத்திற்கு அழைத்துச் சென்றவர் நடிகர்களில் குறிப்பிடத் தகுந்தவர்கள் நடிகர் திலகம், புரட்சி கலைஞர் மற்றும் ஆக்சன் கிங் ஆகியோர். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், பாரத விலாஸ் ஆகிய படங்களின் மூலம் தேசப் பற்றை வளர்த்தார். அதற்கு அடுத்தபடியாக நமது கேப்டன் விஜயகாந்த் ஒருபடி மேலே போய் தீவிரவாதிகளை அடித்து நொறுக்கும் கன்னியமிக்க காவல் அதிகாரியாக நடித்து நாடி நரம்பை புடைக்க வைத்தார்.

இவர்கள் இருவரது ஸ்டைலையும் கலந்து நமக்கு தேச பக்தியை ஊட்டியவர்தான் ஆக்சன் கிங் அர்ஜுன். இப்பொழுதும் இவரை யார் பார்த்து முதன் முதலில் அறிமுகமானலும் ஜெய்ஹிந்த் என்றுதான் அறிமுகமாவார்களாம். அந்த அளவிற்கு தமிழ் மக்களிடையே தேச பக்தியை தனது நடிப்பால் விதைத்து வீரத்தை ஊட்டினார்.

   
jaihind
jaihind 2

அவ்வாறு அர்ஜுனுக்கு அமைந்த படங்களில் முக்கிய திருப்புமுனையாக அமைந்த படம்எது ஜெய்ஹிந்த். 1994-ல் அர்ஜுனே இயக்கி நடித்த இப்படம் இமாலய வெற்றி பெற்றது. இதில் இடம் பெற்ற டைட்டில் டிராக் வைரமுத்துவின் வரிகளில் உருவான ‘தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி..’ பாடல் எஸ்.பி.பியின் அற்புதமான குரலில் நம் நாட்டின் மீதான தேசப்பற்றை நமக்கு அதிகரிக்க வைக்கும். வித்யாசாகர் இசையில் அமைந்த இப்பாடல் எப்போது கேட்டாலும் உடலை மெய்சிலிர்க்க வைக்கும். தீவிரவாத கும்பலிடம் இருந்து நாட்டைக் காக்கும் கதாபாத்திரத்தில் அர்ஜுன் மிரட்டியிருப்பார். இப்படம் இமாலய வெற்றி பெற்றது.

வேண்டாம் என்று சொல்லிய அப்பா.. இன்று கோடிகளில் சம்பாதித்து அவரையே மிரள வைத்த பிரபலத்தின் மகள்

இதனையடுத்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அர்ஜுன் இயக்கத்தில் அவரே நடித்து வெளியான ஜெய்ஹிந்த் 2 படமும் கல்வி அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. கல்விச் சுரண்டலையும், இந்தியாவின் வல்லரசையும் பற்றி அலசி ஆராய்ந்தது. இப்படமும் வெற்றி பெற்றது.

Vijayakanth
vijayakanth

இந்நிலையில் அர்ஜுன் இயக்கி நடித்த இவ்விரு படங்கள் பற்றியும் அப்போது வந்த சிக்கல் ஒன்றை நடிகர் அர்ஜுன் யூடியூப் சேனல் ஒன்றில் பேசியுள்ளார். அந்த படத்திற்கு வரி விலக்கு தர மறுத்துவிட்டார்களாம். ஏனெனில் ஜெய்ஹிந்த் என்பது தமிழ் வார்த்தை கிடையாது. எனவே தமிழ் தலைப்பு வைக்கும் படங்களுக்கு மட்டுமே வரிவிலக்கு உண்டு என்று கூறினார்களாம். உடனே அர்ஜுன் இதுகுறித்து மேலே யார் கிட்ட பேசனுமோ பேசுறேன் என்ற போதும் கூட வரிச்சலுகை கிடைக்கவில்லையாம். இதனால் தமக்கு நஷ்டம் ஏற்பட்டதாக அந்தப் பேட்டியில் கூறியுள்ளார் நடிகர் அர்ஜுன்.

தேச பக்தி படமாக இருந்தும் தமிழ் வார்த்தை இல்லை என்றதால் வரிவிலக்கு அளிக்காத தமிழக அரசின் மீது அப்பொழுது அதிருப்தியில் இருந்திருக்கிறார் அர்ஜுன்.

MV5BNWQ3OGQ2OWYtMjk3Yy00NGVhLWE3ZjQtMzYyMGU1NjVmYTEzXkEyXkFqcGdeQXVyNjQ2MjQ5NzM V1