தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் தனக்கென ஒரு வரவேற்பை அடையாளத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றவர் நடிகை கோவை சரளா. 50 வயதுகளை கடந்த நிலையில் அவர் இன்னும் திருமணம் செய்துக்கொள்ளவில்லை. அந்த எண்ணமும் அவருக்கு இல்லை. இதுகுறித்து சமீபத்திய ஒரு நேர்காணலில் பேசிய நடிகை கோவை சரளா கூறியதாவது, திருமணம் செய்தவர்களை பார்த்து சொன்னா கேட்க மாட்டறீங்களே என்று சிரித்துக்கொண்டு இருக்கிறேன். எப்படியும் மனுஷன் தனியா வாழ்ந்துதான் ஆகணும். கல்யாணம் செய்தால் கடைசி வரை புருஷனை கையில் பிடிச்சுட்டு போக முடியாது.
ஒருவேளை ஏதோ காரணங்களால் நம்மை பாதியில் விட்டுட்டு போகலாம். ஓடிப் போகலாம் அல்லது ஒரேயடியாக மேலே போய்விடலாம். எப்படியும் தனியாக தானே இருந்தாகணும்? அதுமட்டுமின்றி சின்ன வயதில் இருந்தே எனக்குள் என்னை அறியாமல் ஆன்மிகம் இருந்திருக்கலாம். எதிர்காலத்தில் நான் இப்படி இருக்க வேண்டும், என் முகம் மக்களுக்கு தெரிய வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் திருமணம் குறித்த எண்ணமே வரவில்லை. குதிரைக்கு கடிவாளம் போட்டது போல என் பார்வை சினிமாவை நோக்கியே இருந்து விட்டது என்று நடிகை கோவை சரளா வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…