Connect with us

CINEMA

ரகசியமாக வைத்திருந்த காதலரின் புகைப்படத்தை இணையத்தில் முதன்முறையாக பகிர்ந்த நடிகை இலியானா… இவர் தான் அவரின் காதலரா?…

தமிழ் சினிமாவில் ‘கேடி’ என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியானா. இப்படத்திற்கு பிறகு பாலிவுட் பக்கம் சென்றவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பாலிவுட் சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து புகழின் உச்சத்தில் இருந்தார். ஒரு பாடலுக்கு கோடிகளில் சம்பளம் வாங்கினார். இவரை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் விஜயின் நண்பன் படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்தார் .

   

இந்த படத்தில் வரும் ஒரு பாடலில் தனது இடையழகை முழுவதுமாய் காட்டி தமிழ் ரசிகர்களை கட்டி போட்டார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் இவரை காண முடியவில்லை. சமூக வலைத்தளங்களில் மட்டும் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை இலியானா. இவர் அவ்வப்பொழுது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அப்படி சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்தார்.ஆனால் இதுவரையிலும் தனது காதலர் யார் என்று கூறவில்லை.சமீபத்தில் இவர் தனது காதலருடன் மோதிரம் அணிந்த புகைப்படத்தை மட்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். ஆனாலும் அவர் யார் என்பதை இலியானா தெரிவிக்கவில்லை.

தற்போது 9 மாதம் கர்ப்பமாக இருக்கும் இலியானா முதல் முறையாக அவரது காதலர் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். Date Night என குறிப்பிட்டு நேற்று இரவு இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட போட்டோவை இலியானா வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Continue Reading

More in CINEMA

To Top