அஸ்வினி நம்பியார் என்று அழைக்கப்படும் ருத்ரா தமிழ், மலையாளம், தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் நடித்த பிரபலமான நடிகை ஆவார். அஸ்வினி தனது பள்ளி இறுதியாண்டு படிக்கும்போது ஒரு மலையாள பத்திரிகைக்காக தனது வகுப்பு தோழிகளுடன் மாடலிங் பணிகளை செய்தார். அப்போது அந்த பத்திரிகையை பார்த்து இயக்குனர் பாரதிராஜா புது நெல்லு புது நாத்து திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்தார். பாரதிராஜா அவர்களின் மூலம் 1991 ஆம் ஆண்டு புது நெல்லு புது நாத்து என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார் அஸ்வினி.
தொடர்ந்து தூரத்து சொந்தம், 1993 ஆம் ஆண்டு கிழக்குச் சீமையிலே திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. கிழக்கு சீமையிலே திரைப்படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பிரபலமானார் அஸ்வினி. ஆத்தங்கர மரமே என்ற பாடல் இன்றளவும் பிரபலமான பாடலாக உள்ளது. தொடர்ந்து புதுப்பட்டி பொன்னுத்தாயி, முதல் பயணம், பெரிய தம்பி, கள்ளழகர், என்னவளே போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் அஸ்வினி. திருமணத்திற்கு பிறகு சிங்கப்பூரில் சென்று செட்டிலான அஸ்வினி சிங்கப்பூரில் எடுக்கப்படும் தொடர் மற்றும் குறும்படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அஸ்வினி சமீபத்தில் அளித்த பேட்டியில் தன்னுடைய காதல் திருமணம் குறித்த முதல் முறையாக மனம் திறந்து பேசி உள்ளார். அதில், நான் கே வி ரங்கராஜன் சார் புரொடக்ஷனில் சரத் பாபு உடன் இணைந்து ஒரு படத்திற்காக சிங்கப்பூர் சென்று இருந்தேன். அப்போது டீம் எல்லாம் இருக்க மாட்டாங்க அங்க இருக்க ஆளுங்கள வச்சு தான் படத்துக்கான ஷூட்டிங் நடக்கும். அப்போ கே வி ரங்கராஜன் சாரோட நெருங்கிய உறவினராக பழக்கமானவர்தான் என்னுடைய கணவர். முதலில் அவரிடம் நட்பாக தான் பேசி பழகினேன். பிறகு ஒரு வருடம் கழித்து அந்த நட்பு அப்படியே காதலாக மாறியது.
கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் எப்போவாவது நேரில் சந்தித்துக் கொள்வோம். இல்லையென்றால் பெரும்பாலும் எஸ்டிடி பூத்தில் போனில் தான் பேசிக் கொள்வோம். இப்படியே 5 வருடம் கழிந்தது. நான் எதையுமே வெளிப்படையாக சொல்ல மாட்டேன். ரொம்பவே அமைதியாக இருப்பேன். ஐந்து வருடம் கழித்து செட்டிலான பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். இது தொடர்பாக நான் என் அம்மாவிடம் சொன்னபோது அவங்க முடியவே முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அவங்கள பொறுத்த வரைக்கும் என்ன கல்யாணம் பண்ணி வெளியூருக்கு அனுப்பக்கூடாது அது மட்டுமல்லாமல் அவர் வேற கேஸ்ட் என்பதும் கூட பெரிய பிரச்சினையாக இருந்தது. என் அப்பாவும் அம்மா சொல்வதை தான் கேட்பார் அவர் கொச்சினில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
எவ்வளவு அழுதும் அடம் பிடிக்கும் எங்க அம்மா ஒத்துக்கவே இல்ல. இறுதியாக கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து சூட்டிங் செல்வது போலவே வீட்டிலிருந்து ரெடியாகி சென்று விட்டேன். பிறகு பெரம்பூரில் உள்ள ஒரு சின்ன கோவிலில் சாலையோரமாக நின்று கழுத்தில் தாலி கட்டிக் கொண்டு சில நண்பர்களின் உதவியோடு திருமணத்தை ரிஜிஸ்டர் ஆபீஸ் சென்று பதிவு செய்து கொண்டோம். பிறகு கணவரை அழைத்து வீட்டுக்கு வரும்போது அவரை கீழேயே இருக்க சொல்லிவிட்டு நான் அம்மாவை பார்க்கச் சென்றேன். கதவை திறந்து என்னை மனக்கோளத்தில் பார்த்ததும் முடிஞ்சிருச்சா என்று ஒரே ஒரு வார்த்தை தான் கேட்டாங்க.
ஆமா என்று சொன்னதும் அப்படியே கதவை சாத்திட்டாங்க. அழுது கொண்டே நான் வந்துட்டேன். பிறகு சில நண்பர்களின் உதவியுடன் என்னிடம் பேசி என்னோட எல்லா பொருட்களையும் எடுத்துட்டு போக சொன்னாங்க. எனக்கு தேவையான சில பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து வந்து விட்டேன். பிறகு ஒரு வருடம் எந்த பேச்சுவார்த்தையும் இல்லாமல் அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தான் பேச ஆரம்பிச்சாங்க என்று தன்னுடைய காதல் திருமணம் குறித்தும் தான் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டது குறித்தும் அஸ்வினி மனம் திறந்து பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…