#image_title
தமிழ் சினிமாவில் ஒரு சில கலைஞர்களின் வரவு ஒரு திருப்புமுனையாக அமையும். அப்படி தன்னுடைய வரவால் முத்திரைப் பதித்தவர் இயக்குனர் மணிரத்னம். அவர் இயக்கிய மௌன ராகம், நாயகன், தளபதி, ரோஜா, பம்பாய், அலைபாயுதே போன்ற படங்களே அதற்கான சான்று.
தமிழ் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டிருந்த மணிரத்னம் ரோஜா படத்தின் மூலமாக இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகரானார். அந்த திரைப்படம் காஷ்மீர் பிரச்சனை பற்றி பேசியதாலும், ஏ ஆர் ரஹ்மானின் அபாரமான இசையும் இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதன் பிறகு தன்னுடைய படங்களின் கதைக்களத்தை தேசிய பிரச்சனைகளை மையமாக வைத்து எடுத்தார் மணிரத்னம். ரோஜா படத்தில் அரவிந்த் சாமி மற்றும் மதுபாலா ஆகியோருக்கு இடையிலான காதல் காட்சிகள் சிலாகிக்கப்பட்டன. ரோஜா படத்துக்குப் பிறகு மதுபாலா தமிழ் சினிமாவின் முன்னணிக் கதாநாயகியாக வலம் வந்தார்.
ஆனால் முதலில் அந்த படத்தில் நடிக்க இருந்தது மதுபாலா இல்லையாம். மூத்த நடிகை லட்சுமியின் மகளான ஐஸ்வர்யாவைதான் அந்த படத்தில் நடிக்கக் கேட்டுள்ளார் மணிரத்னம். ஆனால் அப்போது அவர் ஒரு தெலுங்கு படத்துக்காக கால்ஷீட் கொடுத்துவிட்டதால் இந்த படத்தில் நடிக்க முடியாது எனக் கூறியுள்ளார்.
ரோஜா படம் வெளியாகி தியேட்டரில் பார்த்த இப்படி ஒரு வாய்ப்பை தவற விட்டு விட்டோமே என வருந்தி தன்னை தானே செருப்பால் அடித்துக் கொண்டதாக ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். இதில் கொடுமை என்னவென்றால் ஐஸ்வர்யா எந்த தெலுங்கு படத்துக்காக ரோஜா படத்தை வேண்டாம் என சொன்னாரோ அந்த தெலுங்கு படம் கடைசி வரை ரிலீஸ் ஆகவே இல்லையாம்.
அதன் பின்னர் சில தமிழ்ப் படங்களில் நடித்த ஐஸ்வர்யா ஒரு கட்டத்தில் வாய்ப்புகளை இழந்தார். பின்னர் வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கி இப்போது காணாமல் போய்விட்டார்.
இந்தோனேசியாவில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில், தொடர் திருட்டுகளால் கடுப்பாகிப் போயிருந்த பொதுமக்கள் நள்ளிரவில் கடையொன்றுக்குள் புகுந்த நான்கு கொள்ளையர்களைக்…
தமிழக முதலமைச்சரின் "தாயுமானவர் திட்டத்தின்" கீழ், 65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று…
தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே, கூட்டணி கட்சிகளுடன் பட்ஜெட் கூட்டத்தொடர், நிர்வாக…
குஜராத் மாநிலம் ஜுனாகத் பகுதியில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், தம்பதியர் இருவர் தங்களது மோட்டார்…
தமிழக அரசியல் களத்தில் கூட்டணிகள் வேகமாக மாறிவரும் நிலையில், வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகளை ஒதுக்காமல்…
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக, காங்கிரஸ் இடையேயான கூட்டணி முறிந்ததைத் தொடர்ந்து, இரு கட்சிகளுக்கும் இடையே கடுமையான…