கேரளாவை சேர்ந்தவர் நடிகை அபிராமி. தமிழில் வானவில் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதில் நடிகர் அர்ஜூனுக்கு ஜோடியாக அபிராமி நடித்திருந்தார். தொடர்ந்து சமுத்திரம் சமஸ்தானம் விருமாண்டி பட்ஜெட் பத்மநாபன் சார்லி சாப்ளின் உள்ளிட்ட படங்களில் நடித்தார். விருமாண்டி படத்தில் கமலுக்கு ஜோடியாக அன்னலட்சுமி கேரக்டரில் அபிராமி நடிப்பு வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை அபிராமி கூறியதாவது, நான் ரஜினி படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். அதுவும் ரஜினியுடன் ஸ்ரீதேவி நடித்த படங்களில் அந்த கேரக்டர் என்றாலும் நடிப்பேன். சந்திரமுகி படத்தில் ஜோதிகா கேரக்டர் படையப்பா படத்தில் நீலாம்பரி கேரக்டர் போன்றவை பெண்களை மையப்படுத்திய பலமான கேரக்டர்களாக இருந்தன. ரஜினி படங்களில் எப்போதுமே கதாநாயகிகளுக்கு போதிய முக்கியத்தும் இருக்கும். தளபதி படத்தில் ஷோபனா நடித்த கேரக்டர் கிடைத்தால் ரொம்பவும் சந்தோஷமாக நடிப்பேன். ரஜினி படத்தில் எந்த கேரக்டர் என்றாலும் எனக்கு ஓகே தான். என்று நடிகை அபிராமி கூறியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த வேளையில், உடல் நலனைப் பேணுவது மிகவும் அவசியமான ஒன்று. வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து…
ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா தனது கடற்படை பலத்தை அரபிக்கடலில்…
இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…