#image_title
தென்னிந்திய நடிகர் சங்க கடன்களை அடைக்க, நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்த், அப்போதைய முன்னணி நடிகர்களிடம் ஆளுக்கு சில லட்சங்களை கொடுங்கள் என்று கேட்டார். ஆனால் யாரும் தர முடியவில்லை. இதையடுத்து அனைவரையும் சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளுக்கு அழைத்துச் சென்று கலைநிகழ்ச்சி இரவுகளை நடத்தி, அதன்மூலம் கிடைத்த பெரிய தொகையை கொண்டு சங்கத்தின் கடன்களை அடைத்தார்.
#image_title
அதே போன்ற ஒரு நிலையில் இப்போது நடிகர் சங்கக் கட்டிடம் கட்டுமான பணி பாதியில் நின்று பல மாதங்களாகிறது. மீண்டும் அந்த பணியை துவங்க வேண்டுமெனில் மீண்டும் பல கோடிகளை செலவிட்டால்தான் முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நடிகர் சங்க நிர்வாகிகள் ஒன்றுகூடி டாப் ஸ்டார்களாக உள்ள நடிகர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுங்கள். அந்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து, அதன்மூலம் கிடைக்கும் வட்டியை, வாங்குகிற கடனுக்கு ஈஎம்ஐ யாக கட்டி விடலாம். நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பிறகு அவரவர் கொடுத்த ஒரு கோடி ரூபாயை திருப்பிக் கொடுத்துவிடலாம் என முடிவு செய்துள்ளனர்.
இப்படி மொத்தம் 20 நடிகர்களிடம் தலா ரூ. ஒரு கோடி வீதம் ரூ. 20 கோடி முதல்கட்டமாக பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைச் சொன்னவுடன் நடிகர்கள் கார்த்தி, சூர்யா, சிம்பு, தனுஷ், விஷால் ஆகியோர் உடனே ஓகே சொல்லி விட்டனர். ஆனால் ரஜினியிடம் இதுபற்றி விவரம் சொல்லப்பட்டுள்ளது. அவரிடம் இருந்து எந்தவிதமான பதிலும் இதுவரை இல்லை. அதே போல் நடிகர் அஜீத்குமாரிடமும் இந்த தகவலை கூறிய போதும் அவரிடமும் எந்த ரியாக்சனும் இல்லாத நிலையில் நடிகர் சங்கம் அப்செட்டில் உள்ளது.
நடிகர்கள் தரும் கோடி ரூபாய்களை வைத்து நடிகர் சங்கம் கட்டடம் கட்டி விடலாம். நாளை பணம் கொடுத்தவர்கள் அதிக உரிமை கொண்டாட வாய்ப்புள்ளதால் என்பதால், அவர்கள் தரும் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து, அந்த வட்டியில் கடன்களுக்கான இஎம்ஐ கட்டிவிட்டு, கடைசியில் அவரவர் பணத்தை திருப்பித் தர முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த விஷயத்தில் ரஜினிகாந்த், அஜீத்குமார் இருவரும் எந்த பதிலும் சொல்லாமல் இதுவரை மவுனம் சாதித்து வருகின்றனர்.
மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…