நடிகர்கள் கட்டிய பொதுத்தலங்கள்.. ஒரு படி மேலே சென்று மிகப்பெரிய விஷயம் செய்த நெப்போலியன்..!!

By Mahalakshmi

Updated on:

தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர் நடிகைகளுக்கு ரசிகர்கள் அவர்கள் மீது இருக்கும் அதிகளவு அன்பின் காரணமாக கோவில் கட்டி வருகிறார்கள். நயன்தாரா, குஷ்பூ போன்றவர்களுக்கெல்லாம் ரசிகர்கள் கோவில் கட்டியிருக்கிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் இருக்கும் சில நடிகர்கள் பொது நலத்திற்காக கோவில் கட்டி இருக்கிறார்கள்.

   

அப்படி கோயில் கட்டியவர்களை இந்த தொகுப்பில் நாம் பார்க்கலாம். முதலாவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த நடிகர் டானியல் பாலாஜி. தன் அம்மா மீது இருந்த அதிக அன்பால் ஆவடியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலை கட்டியுள்ளார்.

அடுத்ததாக நடிகர் அர்ஜுன் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்த இவர் ஒரு தீவிர ஆஞ்சநேயர் பக்தர். இதனால் சென்னை போரூர் கெருகம்பாக்கத்தில் அர்ஜுனுக்கு சொந்தமான இடத்தில் பிரம்மாண்டமான அனுமன் சிலையை நிறுவி கோயில் ஒன்றை கட்டி இருக்கின்றார். இந்த கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

நடிகர் விஜய், நடிகர் விஜய்யின் அம்மா சோபா சந்திரசேகர் ஒரு தீவிர சாய்பாபா பக்தர். இவர் தனது தாய்க்காக கொரட்டூரில் 8 கிரவுண்ட் நிலத்தில் சாய்பாபா கோயில் ஒன்றை கட்டிக் கொடுத்திருக்கின்றார். இதனின் திறப்பு விழா சமீபத்தில் தான் நடந்து முடிந்தது.

நடிகர் ராகவா லாரன்ஸ், பிரைன் ட்யூமர் வந்து நடக்கவே முடியாமல் இருந்த ராகவா லாரன்ஸ் ராகவேந்திரா கடவுள் மீது இருந்த பக்தி காரணமாக ராகவேந்திரா கோவில் ஒன்றை கட்டி இருக்கின்றார். அந்த கோயிலில் தன் அம்மாவிற்காக உருவ சிலையும் அமைத்து வாரந்தோறும் வியாழக்கிழமை வழிபாடு செய்து வருகிறார்.

இவர்களுக்கெல்லாம் ஒரு படி மேலே சென்றிருக்கிறார் நெப்போலியன். தனது மகனு தனுஷுக்கு மஸ்குலர் டிஸ்ஆர்டர் என்ற நோய் இருந்தது. இதனால் நடக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்ட அவருக்கு பல இடங்களில் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் இதற்கு மருந்து உலகினில் எங்கும் இல்லை.

 

பின்னர் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ஒரு கிராமத்தில் நாட்டு வைத்தியம் ஒருவர் நன்றாக பார்ப்பதாக கூறியிருந்தார்கள். அங்கு சென்று மருத்துவம் பார்க்க நடக்கவே முடியாது என்று கூறிய தனுஷ் படிப்படியாக நடந்தார். இதை தொடர்ந்து அங்கு தன் மகனைப் போல் வரும் நோயாளிகளுக்கு நல்ல சிகிச்சை கொடுக்க வேண்டும் என்பதற்காக 10 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக மருத்துவமனை ஒன்றை கட்டிக் கொடுத்திருக்கிறார் நெப்போலியன்.

author avatar
Mahalakshmi