Categories: சினிமா

7 வயசிலேயே பாரத பிரதமருக்கு கடிதம் எழுதிய சின்ன கலைவாணர் விவேக்.. பதிலுக்கு இந்திரா காந்தி என்ன செய்தார் தெரியுமா..?

Spread the love

தமிழ் சினிமாவில் காமெடி என்றால் அனைவருடைய நினைவுக்கும் வருவது விவேக் தான். தன்னுடைய நகைச்சுவையால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கட்டி போட்டவர். நகைச்சுவை மூலம் சமூக கருத்துக்களை திரைப்படங்கள் மூலமாக நமக்கு வழங்கி வந்தவர். இப்படி புகழ்மிக்க கலைஞரான விவேக் மாரடைப்பு காரணமாக கடந்த 2021 ஆம் ஆண்டு காலமானார். இவருடைய இழப்பு தமிழ் திரை உலகிற்கு மட்டும் அல்லாமல் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இவர் இறந்ததற்குப் பிறகு திரையுலக நட்சத்திரங்களும் ரசிகர்களும் விவேக் குறித்து பல சுவாரசியமான நிகழ்வுகளை சமூக வலைத்தளங்களில் நினைவு கூர்ந்து வருகிறார்கள்.

அதன்படி நடிகர் விவேக், முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்திக்கு சிறுவயதில் எழுதிய கடிதத்தை ரசிகர்கள் அவருடைய பிறந்த நாளான இன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக்கி வருகிறார்கள். விவேகானந்தர் என்ற இயற்பெயர் கொண்ட விவேக் நீலகிரி மாவட்டத்தின் குன்னுரை அடுத்த ஒட்டுப்பட்டறையில் உள்ள சாந்தி விஜயா ஜூனியர் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.

அப்போது முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்திக்கும் தனக்கும் ஒரே நாளில் பிறந்த தினம் என்று கூறியதை நினைவில் வைத்திருந்த விவேக் தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் பாரத பிரதமரான இந்திரா காந்திக்கு வாழ்த்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “my birthday your birthday same birthday, I wish you you wish me” என்று விவேக் குறிப்பிட்டு இருந்தார்.

தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்திருந்த விவேகுக்கு இந்திரா காந்தி கைப்பட பதில் கடிதம் ஒன்றையும் எழுதினார். அந்த கடிதத்தை விவேக் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் நீங்காத நினைவாக பத்திரப்படுத்தி வைத்திருந்தார். ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற விவேக், இந்திரா காந்தி தனக்கு கடிதம் எழுதிய நினைவுகளை பகிர்ந்திருந்தார். தற்போது அந்த கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Nanthini

Recent Posts

உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு 6 1/2 பவுன் அபேஸ்… 70 வயது முதியவரின் விபரீத ஆசை… 38 வயது பெண் செய்த காரியம்…!!

சென்னை போரூர் அருகே மகள் வெளியூர் சென்றிருந்த நேரத்தில், வீட்டில் தனியாக இருந்த 70 வயது முதியவர் ஒருவர் தனக்கு…

23 seconds ago

BREAKING: கனமழை வெளுத்து வாங்கும்… தமிழக மக்களே அலெர்ட்..!!

தென்மேற்குப் பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் தொடங்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளதால் தமிழகத்தில்…

10 minutes ago

“நான் வில்லி இல்லை.. நாங்க யாரையும் பிரிக்க வரல”… வதந்திகளுக்கு லீமா ரோஸ் கொடுத்த நெத்தியடி பதில்.. அந்த ஒற்றை வார்த்தையால் ஆடிப்போன அரசியல் களம்…!!!

தமிழக அரசியலில் கூட்டணி மாற்றங்கள், கட்சிகள் இடையேயான விமர்சனங்கள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை மையமாகக் கொண்ட விவாதங்கள் தீவிரமடைந்து…

12 minutes ago

“தளபதிய கேட்டதா சொல்லுங்க” ரசிகர்களுக்கு திரிஷா சொன்ன அந்த வார்த்தை… ரசிகர்கள் ஷாக்..!!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'கருப்பு' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தின்…

15 minutes ago

விஜய்க்கு வந்த புது சிக்கல்!… தேர்தலில் ஓட்டு போட்ட வெளிநாட்டினர்.. ஏர்போர்ட்டில் அடுத்தடுத்து சிக்கும் ‘மை’ விரல்கள்… கோட்டையை உலுக்கும் தேர்தல் முறைகேடு…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்து, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு…

23 minutes ago

மகளிர் உரிமைத்தொகை ரூ.2500… தமிழக முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு..!!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில், தகுதியுள்ள மகளிருக்கான மாதாந்திர உரிமைத் தொகையை தவெக கட்சியின் தேர்தல் வாக்குறுதியின்படி ₹2,500 ஆக…

27 minutes ago