
VIDEOS
ஒரு நாளைக்கு 25 முறை சிகரெட் பிடிப்பேன், ஆனா.. திடீரென பேட்டியில் உண்மையை உளறிய நடிகர் விஷால்…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஷால். செல்லமே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த இவர் தற்போது முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இவர் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த வாரம் வெளியான நிலையில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா இரண்டு வேடங்களில் நடித்துள்ளனர்.
சயின்ஸ் பிக்சன் மற்றும் டைம் ட்ராவல் கதையை இந்த படம் கொண்டுள்ளது. அனைவருக்கும் புரியும்படி ஆதிக் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். விஷாலும் எஸ்.ஜே. சூர்யாவும் இந்த படத்தில் டூயல் ரோல் பண்ணி உள்ளனர். சுனில், செல்வராகவன் மற்றும் அபிநயா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் வசூல் ரீதியாக மாபெரும் சாதனை படைத்துள்ள நிலையில் படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
இந்த நிலையில் சமீபத்தில் விஷால் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த போது புகை பிடிப்பது பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த விஷால் தான் ஒரு நாளைக்கு 25 சிகரெட் வரை குடித்ததாகவும் ஆனால் தற்போது சிகரெட் குடிப்பதை நிறுத்தி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டதாகவும் கூறியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.