Categories: சினிமா

‘நீ சினிமாவில் நடிக்க வந்ததே என்னால தான், உனக்கு நான் சாப்பாடு பரிமாறனுமா’.. சிவாஜி குறித்து ஓப்பனாக பேசிய நடிகர் விஜயகுமார்..

Spread the love

நடிகர் சிவாஜி கணேசன் பெரிய நடிகராக இருந்த காலகட்டத்தில், இளைஞராக இருந்த விஜயகுமாரும் பல படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். சில படங்களில் சிவாஜி கணேசனுடன், விஜயகுமார் நடித்திருக்கிறார். அப்போது அவர்களுக்குள் நல்ல பழக்கமும் நட்பும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சமீபத்திய ஒரு நேர்காணல் விஜயகுமார் கூறியதாவது, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எங்களுடன் நெருக்கமாக இருந்தார். எங்கள் வீட்டுக்கு அவர் சாப்பிட வருவார். அவர் வீட்டுக்கு நானும் சாப்பிட செல்வேன்.

அப்படி ஒருமுறை போனபோது சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது ஆமா, டேய் விஜயா எப்படிடா சினிமாவுக்கு வந்தே? என்று கேட்டார். அண்ணே, அதான் பலமுறை உங்ககிட்ட சொல்லி இருக்கேனா, 40 மைல் சைக்கிள் மிதிச்சு உங்களோட கட்டபொம்மன் படத்தை பார்க்க வருவேன். அப்படி பார்க்க வந்து வந்துதான் சினிமாவில் நடிக்கவே ஆசைப்பட்டேன், என்றேன். அவர் சாப்பாடு பரிமாறிட்டே இருக்கார். அப்போது சிவாஜி, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க, அந்த மீன் துண்டை எடுத்துப் போடுங்க, கொஞ்சம் குழம்பு ஊத்துங்க என்றார்.

அப்போது, ஏண்டா விஜயா என் படத்தை பார்க்க 40 மைல் சைக்கிள்ல வந்திருக்கே, இப்போ என்கிட்டேயே மீனை எடுத்து வை, குழம்பை ஊத்துன்னு சொல்றியா, உனக்கு நான் பரிமாறனுமா என்று என்னிடம் ஜாலியாக கேட்டார். அதுதாண்ணே சாதனை என்றேன். அப்போது அவர் சொன்னார். டேய் விஜயா நானும் கட்டபொம்மன் தெருக்கூத்து பார்த்துதாண்டா நாடக கம்பெனியில் போய் சேர்ந்தேன். நம்ம ரெண்டு பேருக்குள்ள என்ன ஒற்றுமை பார்த்தியா என்று சிவாஜி அப்போது சொன்னதாக, நடிகர் விஜயகுமார் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். அப்போது அவரது மகன் நடிகர் அருண் விஜய் உடனிருந்தார்.

admin

Recent Posts

பராசக்தி படத்துக்கு U/A சான்றிதழ்…! ஆனா இத்தனை கண்டிஷன்களா…? எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்…!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம் சென்சார் வாரியத்தின் கடும் நெருக்கடிக்குப் பிறகு ஒருவழியாக (U/A) சான்றிதழ் பெற்றுள்ளது. படத்தில்…

1 மணத்தியாலம் ago

சொந்த வீடு கனவு நனவாகப்போகுது…! 50 லட்சம் லோன் வாங்க நீங்க தகுதியானவரா…? இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க…!!

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளதால், தற்போது வங்கிகளில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 7.20 சதவீதமாகக்…

2 மணத்தியாலங்கள் ago

“அன்று ஜெயலலிதாவிடம் அப்படி… இன்று ஏன் இப்படி?”… விஜய்யின் கடந்த காலத்தை தோண்டி எடுத்த சரத்குமார்….!

கோவையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் சரத்குமார், நடிகர் விஜய் மற்றும் அவரது திரைப்பட வெளியீட்டில் நிலவும் சிக்கல்கள் குறித்து…

2 மணத்தியாலங்கள் ago

உங்க PF பதிவுகளில் தப்பு இருக்கா…? திருத்த போறீங்களா…? லிஸ்டில் சேர்ந்த புதிய ஐடி கார்டு…. ஊழியர்களுக்கு ஒரு குட் நியூஸ்…!!

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, தனது வாடிக்கையாளர்கள் பெயர் மற்றும் பாலின மாற்றங்களைச் செய்வதற்குத் திருநங்கைகளுக்கான தேசிய…

2 மணத்தியாலங்கள் ago

ஸ்டாலினுக்கு செக் வைத்த கூட்டணி கட்சிகள்…. தொகுதிப் பங்கீட்டில் வெடித்த புதுப்போர்… அதிர்ச்சியில் அறிவாலயம்….!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு மற்றும் ஆட்சிப்…

2 மணத்தியாலங்கள் ago

மாணவர்களுக்கு ஷாக்… நாளை பள்ளிகள் விடுமுறை கிடையாது… அடுத்தடுத்து வெளியாகும் அறிவிப்பு…!

சென்னையைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்திலும் ஜனவரி 10 நாளை சனிக்கிழமை அனைத்து பள்ளிகளும் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago