‘நீ சினிமாவில் நடிக்க வந்ததே என்னால தான், உனக்கு நான் சாப்பாடு பரிமாறனுமா’.. சிவாஜி குறித்து ஓப்பனாக பேசிய நடிகர் விஜயகுமார்..

By Sumathi

Updated on:

நடிகர் சிவாஜி கணேசன் பெரிய நடிகராக இருந்த காலகட்டத்தில், இளைஞராக இருந்த விஜயகுமாரும் பல படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். சில படங்களில் சிவாஜி கணேசனுடன், விஜயகுமார் நடித்திருக்கிறார். அப்போது அவர்களுக்குள் நல்ல பழக்கமும் நட்பும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சமீபத்திய ஒரு நேர்காணல் விஜயகுமார் கூறியதாவது, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எங்களுடன் நெருக்கமாக இருந்தார். எங்கள் வீட்டுக்கு அவர் சாப்பிட வருவார். அவர் வீட்டுக்கு நானும் சாப்பிட செல்வேன்.

   

அப்படி ஒருமுறை போனபோது சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது ஆமா, டேய் விஜயா எப்படிடா சினிமாவுக்கு வந்தே? என்று கேட்டார். அண்ணே, அதான் பலமுறை உங்ககிட்ட சொல்லி இருக்கேனா, 40 மைல் சைக்கிள் மிதிச்சு உங்களோட கட்டபொம்மன் படத்தை பார்க்க வருவேன். அப்படி பார்க்க வந்து வந்துதான் சினிமாவில் நடிக்கவே ஆசைப்பட்டேன், என்றேன். அவர் சாப்பாடு பரிமாறிட்டே இருக்கார். அப்போது சிவாஜி, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க, அந்த மீன் துண்டை எடுத்துப் போடுங்க, கொஞ்சம் குழம்பு ஊத்துங்க என்றார்.

அப்போது, ஏண்டா விஜயா என் படத்தை பார்க்க 40 மைல் சைக்கிள்ல வந்திருக்கே, இப்போ என்கிட்டேயே மீனை எடுத்து வை, குழம்பை ஊத்துன்னு சொல்றியா, உனக்கு நான் பரிமாறனுமா என்று என்னிடம் ஜாலியாக கேட்டார். அதுதாண்ணே சாதனை என்றேன். அப்போது அவர் சொன்னார். டேய் விஜயா நானும் கட்டபொம்மன் தெருக்கூத்து பார்த்துதாண்டா நாடக கம்பெனியில் போய் சேர்ந்தேன். நம்ம ரெண்டு பேருக்குள்ள என்ன ஒற்றுமை பார்த்தியா என்று சிவாஜி அப்போது சொன்னதாக, நடிகர் விஜயகுமார் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். அப்போது அவரது மகன் நடிகர் அருண் விஜய் உடனிருந்தார்.

author avatar
Sumathi