Categories: சினிமா

என்ன மனசு சார்.. வெள்ளத்தில் தத்தளிக்கும் தூத்துக்குடி மக்கள்… ஷூட்டிங்கை விட்டுவிட்டு ஓடோடி வந்த பிரபல நடிகர்…

Spread the love

தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத மழையால் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

குமரிக் கடலில் உண்டான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வடகிழக்கு பருவமழை மற்றும் இலங்கை அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆகியவை தென் தமிழ்நாட்டில் பெருமழையை கொட்டித் தீர்த்தது.

ஒரு ஆண்டு முழுவதும் பெய்யக் கூடிய 95 செமீ மழை, ஒரே நாளில் காயல்பட்டினத்தில் கொட்டியது. இதனால் 4 மாவட்டங்களிலும் வெள்ளம் கரை புரண்டோடியது.

அணைகள் நிரம்பியது, தாமிரபரணி நதியில் 1 லட்சம் கன அடி வெள்ள நீர் பாய்ந்தோடியது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. பல நூறு கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து தனித்தனி தீவுகளாக தத்தளிக்கின்றன.

வெள்ள மீட்பு, நிவாரணப் பணிகளில் மாநில பேரிடர் குழுக்களுடன் முப்படைகளும் களத்தில் இறங்கி தொடர்ந்து பணியாற்றி வருகின்றன.

தமிழ்நாடு அரசு அமைச்சர்கள் படையை களமிறக்கி போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபலங்களும் தங்களால் இயன்ற உதவிகளை தூத்துக்குடி மக்களுக்கு செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் அபி சரவணன். 20-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள இவர் தனது பெயரை விஜய் விஷ்வா என மாற்றிக் கொண்டு படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இவரது படத்திற்கு தற்பொழுது ஹைதராபாத்தில் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. தூத்துக்குடி வெள்ளம் பற்றி கேள்விப்பட்ட இவர் ஷூட்டிங்கை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து காரிலேயே தூத்துக்குடி வந்து விட்டார்.

#image_title

இவர் மக்களுக்கு டூத் பேஸ்ட், பிரஸ் உடல் வலி மாத்திரைகள், ஓஆர்எஸ் குளுக்கோஸ், கோதுமை மாவு, பிஸ்கட், ஷாம்பு, நாப்கின்ஸ், போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்கி, போட்டில் சென்று அடிப்படை வசதி இன்றி, வெள்ளத்தில் தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு கொடுத்தார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்பொழுது அவரின் இந்த நல்ல மனதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Begam

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

8 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

8 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

9 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

9 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

10 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

10 மணத்தியாலங்கள் ago