Categories: சினிமா

பிரபல காமெடி நடிகர் போண்டாமணி திடீர் மரணம்.. என்ன ஆனது..? அதிர்ச்சியில் மூழ்கிய திரையுலகினர்..

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் போண்டாமணி. இவர் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர். இவருடைய சொந்த ஊர் இலங்கையில் உள்ள மன்னார் பகுதி. நடிகர் போண்டாமணியின் உண்மையான பெயர் கோத்தீஸ்வரன். அங்கு நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த இவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது ஆசை கனவாக இருந்தது.

1991 இல் பாக்கியராஜ் நடிப்பில் வெளிவந்த ‘பவுனு பவுனுதான்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் கால் பதித்தவர் போண்டாமணி. இதைத் தொடர்ந்து  சுந்தரா ட்ராவல்ஸ், மருதமலை, வின்னர் ,வேலாயுதம், ஜில்லா போன்ற பல திரைப்படங்கள் முன்னணி நடிகர்களுடன் சிறு சிறு கதாபத்திரங்களில் நடித்துள்ளார்.  இவருடைய நடிப்பு மக்கள் மத்தியில் பிரபலமானது.

இவர் 2019ல் வெளியான ‘தனிமை’ படத்திலும் நடித்திருந்தார்.  வடிவேலு, விவேக் உள்ளிட்ட காமெடி நடிகர்களுடன் இவருடைய நடிப்பு ரசிகர்களால் கவனிக்கப்பட்டது.  இதுவரை 250க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கன்னட பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவருடைய மனைவி பெயர் மாதவி. இவருக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.

இந்நிலையில் பல ஆண்டுகளாக சிறுநீரக பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்த பிரபல நகைச்சுவை நடிகர் பூண்டாமணி நேற்றிரவு தனது வீட்டில் மயக்கம் அடைந்து கீழே விழுந்த நிலையில் உயிரிழந்தார். கடந்த சில ஆண்டுகளாக இவருக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டது. மாதம் ஒருமுறை மருத்துவமனை சென்று டயாலிசிஸ் செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் பல்லாவரத்தில் உள்ள தனது வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். உறவினர்கள் அவரை மருத்துவமனை அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்பொழுது நடிகர் போண்டாமணியின் மரணம் திரை உலகில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Begam

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

9 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

9 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

10 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

10 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

11 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

11 மணத்தியாலங்கள் ago