#image_title
நடிகர் வடிவேலு வளர்ந்து வரும் அறிமுக நடிகராக இருந்த காலகட்டத்திலேயே சின்னக்கவுண்டர் போன்ற படங்களில் நடித்துக்கொண்டு இருந்தார் விஜயகாந்த். பெரிய நடிகராக இருந்தாலும், துணை நடிகர்களை, அறிமுக நடிகர்களை மரியாதையாக நடத்தி, தனது படங்களில் வாய்ப்பு கொடுக்கும் பண்பு கொண்டவர் விஜயகாந்த். சின்னக்கவுண்டர் படத்தில், விஜயகாந்துடன் குடை பிடித்து கொண்டு வரும் மாகாளி கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தவர் மண்ணாங்கட்டி சுப்ரமணியம்.
பாக்யராஜ் படங்களில் இவர் நடித்திருப்பார். குறிப்பாக எங்க சின்ன ராசா படத்தில் பாக்யராஜூடன் பண்ணையாளாக மண்ணாங்கட்டி சுப்ரமணியம் நடித்திருந்தார். அவர் பாக்யராஜ் படங்களில் பிஸியாக இருந்ததால், சின்னக்கவுண்டர் படத்தில் நடிக்க முடியவில்லை. அதனால், அந்த கேரக்டரில் நடித்தவர்தான் வடிவேலு. பிறகு தவசி படத்திலும் நடித்திருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் விஜயகாந்த், வடிவேலு இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. ஆனால் எந்த இடத்திலும் விஜயகாந்த், வடிவேலு குறித்து தவறாக பேசியது இல்லை. ஆனால் பல இடங்களில், பல மேடைகளில் விஜயகாந்தை தரம்தாழ்த்தி பேசியவர் வடிவேலுதான்.
இவர்களின் இந்த பிரச்னைக்கு முக்கிய காரணமே, கார் பார்க்கிங்தான். இதுகுறித்து வடிவேலுவுடன் பல படங்களில் காமெடி காட்சிகளில் நடித்தவர் சுப்புராஜ் ஒரு நேர்காணலில் கூறியதாவது, விஜயகாந்த் வீடு உள்ள வீதியில்தான் வடிவேலு அலுவலகம் இருந்துள்ளது. அப்போது இரவில் காரில் வடிவேலு தன் சக நடிகர்களுடன் அலுவலகம் வந்துள்ளார். அப்போது அவரது அலுவலகம் முன்பு, வீதி முழுவதும் கார்களாக நின்றுள்ளது. அப்போது ஏன் இப்படி வீதி முழுக்க கார் நிறுத்தப்பட்டுள்ளது என கேட்டதற்கு, விஜயகாந்தின் அக்கா கணவர் இறந்துவிட்டார் என கூறியதால், வடிவேலு சரி போகலாம். காலையில் சென்று துக்கம் விசாரிக்கலாம் என்று கூறிவிட்டார். அதன்பின்பு அங்கு வந்த சிலர், வடிவேலு என்ன விசாரிச்சான் எனக் கேட்டு தகராறு செய்து, வடிவேலு அலுவலகத்துக்குள் நுழைந்து எல்லாவற்றையும் உடைத்து நொறுக்கி விட்டனர், என்று கூறியிருக்கிறார் அந்த துணை நடிகர் சுப்புராஜ் .
மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டம் கராத் அருகே, புனே - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் புதிதாகத் திறக்கப்பட்ட ஆறு வழி…
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் ரகுநாதபாளம் மண்டலம் வி. வெங்கடாயபாலம் கிராமத்தில், செல்போன் மிரட்டல் மற்றும் தொடர் தொல்லைகளால் மனவேதனை…
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்ஸ்டா பிரபலம் 'வாட்டர் மெலன் ஸ்டார்' திவாகர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியவை தற்போது சமூக…
திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்தினரிடையே கட்சி பொறுப்புகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது தொடர்பாக சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தனியார் நாளிதழ்…
திண்டுக்கல் மாவட்ட திமுகவின் முக்கியத் தூண்களில் ஒருவராக விளங்கிய மாநில நிர்வாகி வி.ஜெயன், கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். திமுகவின்…
வரும் அக்டோபர் 23-ம் தேதி உருவாகவிருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது மேலும் வலுவடைந்து புயலாக மாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக…