Categories: சினிமா

இலங்கை பெண் ரசிகை, நடிகர் விஜய் மனைவியான கதை – பெற்றோர் நிச்சயித்து, காதல் திருமணம் செய்த விஜய் – சங்கீதா

Spread the love

நடிகர் விஜய், சங்கீதா திருமணம் பற்றி பேசும்போது பலரும் அவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டதாக கூறிவருகின்றனர். ஆனால், அவர்கள் வாழ்க்கையில் நடந்த உண்மை கதை இதுதான். கடந்த 1995ம் ஆண்டில் விஜய் பூவே உனக்காக படத்தில் நடித்துக்கொண்டு இருந்தார். அப்போது இலங்கையில் உள்ள பெரிய தொழிலதிபர் மகளும், லண்டனில் பட்டம் படித்தவருமான சங்கீதா சென்னைக்கு வருகிறார். அப்போது விஜயை அந்த படப்பிடிப்பில் அவரது ரசிகையாக சந்தித்து பேசுகிறார்.

அடுத்த ஆண்டும், சென்னை வரும்போது விஜயை சந்திக்கிறார். அப்போது அவரது பெற்றோர் எஸ்ஏ சந்திரசேகர், ஷோபா ஆகியோரை சந்திக்க வேண்டும் என்க, விஜய் ஓகே சொல்கிறார். அவரும் விஜய் பெற்றோரை போய் நேரில் சந்திக்கிறார். அதன்பிறகு சங்கீதா சென்னை வரும்போதெல்லாம் விஜய், அவர் பெற்றோரை சங்கீதா சந்திக்கிறார். அப்படி சந்திக்க ஒருமுறை வரும்போது, சங்கீதாவிடம், விஜயை திருமணம் செய்துக்கொள்ள சம்மதமா என எஸ்ஏசி, ஷோபா கேட்க, சங்கீதாவும் சம்மதம் சொல்கிறார். விஜயிடம் கேட்க, உங்களுக்கு விருப்பம் என்றால் எனக்கு சம்மதம் என்கிறார். அதுவரை விஜய், சங்கீதாவுக்குள் காதல் ஏற்படவில்லை,

அதன்பிறகு 1998ம் ஆண்டில் இறுதியில் லண்டனில் விஜய், சங்கீதா திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. அதன்பிறகு 1999ம் ஆண்டு, ஆகஸ்ட் 25ல், சென்னையில் அவர்களது திருமணம், ராணி மெய்யம்மை ஹாலில் 2 நாட்கள் நடக்கிறது. நிச்சயதார்த்தத்துக்கும், திருமணத்துக்கும் இடையிலான இந்த 9 மாதங்களில்தான் அவர்கள் பேசி, பேசி காதலிக்கின்றனர்.

மற்றபடி அதற்கு முன்பாக அவர்களுக்குள் காதல் என்ற விஷயம் இல்லை என்று கூறியிருக்கிறார் விஜய் அப்பா சந்திரசேகர். இந்த திருமண விழாவில் 2ம் நாளில் நேரு இன்டோர் ஸ்டேடியத்தில் 60 ஆயிரம் ரசிகர்கள் மத்தியில் மேடையில் விஜய், சங்கீதா மாலை மாற்றிக்கொண்டனர். அங்கு வந்த 60 ஆயிரம் விஜய் ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து அளிக்கப்பட்டுள்ளது.

admin

Recent Posts

வாழ்வா? சாவா? நொடிக் கணத்தில் தப்பிய உயிர்.. ராஜநாகத்துடன் நேருக்கு நேர் மோதிய நாய் – இணையத்தை அதிர வைக்கும் பகீர் காட்சி..!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நாய்க்கும் ராஜநாகத்திற்கும் இடையே நடந்த கடுமையான…

2 minutes ago

பகீர்… டெலிவரி பாய் வேடத்தில் வந்த கொள்ளையன்.. கோயில் வளாகத்திலேயே கைவரிசை – சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி..!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…

12 minutes ago

சச்சினையே சொக்க வைத்த குட்டி இன்ஜினியர்… திறமைக்குத் தடை ஏது?.. கார் தயாரித்த கிராமத்துச் சிறுவன்.. வைரலாகும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…

30 minutes ago

தந்தையே எமனாக மாறிய அவலம்!” – மகனைத் தீர்த்துக்கட்டிவிட்டு தானும் முடித்துக் கொண்ட தந்தை; ஒரு நொடி ஆத்திரத்தால் சிதைந்த குடும்பம்.!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…

39 minutes ago

பகீர்.! வானில் பற்றிய தீ… தரை இறங்கியபோது நேர்ந்த கோர விபத்து!” – 277 பயணிகளுடன் வந்த துர்க்கி ஏர்லைன்ஸ் விமானத்திற்கு நேர்ந்த கதி..!

நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தரையிறங்கும் போது திடீரென தீ…

48 minutes ago

BIG BREAKING: போட்டியின்றி சபாநாயகராக தேர்வானார் ஜே.சி.டி. பிரபாகர்..!!

தமிழ்நாடு சட்டமன்றத்தின் புதிய சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகரும், துணை சபாநாயகராக ரவிசங்கரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான வேட்புமனு தாக்கல்…

57 minutes ago