Categories: சினிமா

சுதா கொங்கரா சொன்ன வார்த்தையால் டென்ஷனான விஜய்.. புறநானூறு படத்திற்கு NO சொல்ல இதுதான் காரணம்.. சூர்யா கமிட் ஆனது எப்படி..??

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருக்கும் சுதா கொங்கரா மற்றும் சூர்யா முதல் முறையாக இணைந்து சூரரைப் போற்று என்ற திரைப்படத்தில் பணியாற்றினர். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் இந்த திரைப்படத்துக்கு கிடைத்தது. அது மட்டுமல்லாமல் ஆறு தேசிய விருதுகளை அசால்டாக தட்டி தூக்கியது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா மற்றும் சுதா கொங்காரா கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது. அதன்படி சூர்யாவின் 43 வது திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார்.

இந்த திரைப்படத்திற்கு புறநானூறு என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு ஜிபி பிரகாஷ் இசை அமைக்கிறார். இதில் சூர்யாவுடன் நஸ்ரியா ஜோடியாக நடிக்க உள்ளார். நடிகர் துல்கர் சல்மான், விஜய் வருமா ஆகி வரும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வரலாற்று கதை அம்சம் கொண்ட திரைப்படமாக தயாராக உள்ள நிலையில் சூரியா இதில் கல்லூரி மாணவராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் சூட்டிங் வருகின்ற ஜனவரி மாதம் தொடங்க உள்ளது. 1970 முதல் 80 காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் புறநானூறு திரைப்படத்தின் கதையை முதலில் சுதா கொங்கரா விஜய் இடம் கூறியதாகவும், உடனே கதை விஜய்க்கு பிடித்து போக இரண்டு மாதங்களில் படப்பிடிப்பை தொடங்கி விடுங்கள் நான் நடிக்கிறேன் என்று ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் இயக்குனர் சுதா கொங்கரா புரொடக்ஷன் பணிகள் 6 மாத காலம் முடிந்த பிறகு தான் படப்பிடிப்பு தொடங்கும் என கூறியுள்ளார். அதனால் ஆறு மாதங்களுக்கு தன்னால் எதற்காக எதிர்பார்த்துக்கொண்டு இருக்க முடியாது என்று விஜய் இதில் நடிக்க மறுப்பு தெரிவிக்க அதன் பிறகு சூர்யாவை இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.

Nanthini

Recent Posts

“என் வாழ்நாளே போச்சு!”… ரூ.12 லட்சத்தை தின்று தீர்த்த எலிகள்… வங்கிக்கு போகாமல் வீட்டில் வைத்ததால் நேர்ந்த விபரீதம்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தங்க நகைகள் வாங்குவதற்காக பல ஆண்டுகளாகச் சேமித்த சுமார் 12…

4 minutes ago

“என் கணவர் ஆபாச போட்டோவை…” 2022-ஆம் ஆண்டு முதல் சொந்த மனைவியை…. ஆசிரியையின் பரபரப்பு புகார்… வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

ஹைதராபாத் பசவதாரகம் நகரைச் சேர்ந்த 24 வயது ஆசிரியை ஒருவர், தனது கணவர் மீது பிலிம்நகர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பான…

7 minutes ago

“கண்ணை மறைத்த காதல்…” பெற்றோருக்கு விஷம் வைத்து கொன்ற செவிலியர்… போதை ஊசி போட்டு உயிரை விட்ட கொடூரம்…. பகீர் பின்னணி…!!

தெலங்கானா மாநிலம் சங்கா ரெட்டியில், காதலனுக்காகப் பெற்றோரைக் கொன்ற வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த சுரேகா என்ற இளம் செவிலியர்…

16 minutes ago

ஐயோ… இவன் பைத்தியம்… பக்கத்துல போகாதீங்கடி… கத்திய அம்மா… சட்டென ஓடிப்போய் ராக்ஷி கட்டிய சிறுமி… அடுத்து நடந்த வைரல் சம்பவம்… இணையத்தை கலக்கும் வீடியோ…!

இந்தக் காணொளி மனிதநேயமும் அன்பும் தோற்றத்தைக் கடந்தது என்பதை மிகவும் அழகாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் உணர்த்துகிறது. சாலையில் திரியும் ஒருவரைச் சமூகம்…

19 minutes ago

ஒரே வீட்டில் கணவர் + காதலன்…!போலீஸ் நிலையத்தையே அதிரவைத்த மனைவியின் விசித்திர ஆசை… திக்குமுக்காடிய போலீஸ்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் திருமணமான ஒரு பெண், தனது கணவர் மற்றும் காதலன் ஆகிய இருவருடனும் ஒரே…

20 minutes ago

அட கடவுளே… இது என்ன அதிசயம்?… 4 கைகள், 4 கால்களுடன் பிறந்த குழந்தை… வியப்பில் மருத்துவர்கள்… மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு…!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள சமூக சுகாதார மையத்தில், நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் அபூர்வமான குழந்தை…

28 minutes ago