#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், பாடகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என பல துறைகளில் கமல்ஹாசன் உள்ளார். தனி நபராக இதுவரை நான்கு தேசிய திரைப்பட விருதுகளை வென்றுள்ளார். ஆஸ்கார் விருதுக்கு அனுப்பப்பட்ட முதல் சில நடிகர்களில் கமல்ஹாசனும் ஒருவராக இருந்துள்ளார். அதன்படி வெளிநாட்டு திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட கமல்ஹாசனின் படங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
ஹே ராம்:
2000 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை கமல்ஹாசன் எழுதி இயக்கி இவரே நடித்திருந்த நிலையில் கமல்ஹாசன் உடன் ஷாருக்கான் மற்றும் வசுந்தராதா சொல்லிட்ட பலரும் நடித்திருந்தனர். சுதந்திரப் போராட்ட வீரர் மகாத்மா காந்தியின் படுகொலையையும் சுதந்திரப் போராட்டத்தையும் அற்புதமாக மக்களுக்கு வெளிப்படுத்திய திரைப்படம் இதுவாகும்.
இந்தியன்:
1996 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை சங்கர் இயக்கி இருந்த நிலையில் கமல்ஹாசன் மற்றும் மனிஷா கொய்ராலா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சேனாதிபதி என்ற சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் லஞ்சம் என்ற கருத்துக்கு எதிராக அவர் எப்படி இந்தியாவில் இருந்து ஊழலை அகற்ற வேண்டும் என்று பல கொலை குற்றங்களை செய்தார் என்பதை இந்த படம் அற்புதமாக வெளிப்படுத்தி இருந்தது.
குருதிப்புனல்:
கடந்த 1995 ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீ ராம் இயக்கிய இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், நாசர் மற்றும் அர்ஜூன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். நக்சலைட் பயங்கரவாத குழுவை கட்டுப்படுத்த முயலும் கமல்ஹாசன் மற்றும் அர்ஜுன் ஆகிய இரண்டு காவல்துறை அதிகாரிகளையும் இவர்களின் தலைவராக நாசர் நடித்திருந்தார்.
தேவர் மகன்:
1992 ஆம் ஆண்டு பரதன் இயக்கிய தேவர்மகன் திரைப்படத்தை கமல்ஹாசன் எழுதி இருந்தார். இதில் கமல்ஹாசன் உடன் சிவாஜி, ரேவதி, கௌதமி மற்றும் நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் ஒரு வழிபாட்டு கிளாசிக் மற்றும் கிராமத்தில் உள்ள இரண்டு குடும்பங்களை பற்றி அற்புதமாக எடுக்கப்பட்டிருந்தது.
நாயகன்:
மணிரத்தினம் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் கமல்ஹாசன் மற்றும் சரண்யா முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இது ஆக்சன் கிரைம். தாராவி குளிசை பகுதிகளில் வசிக்கும் மக்களின் குரலாக வேலுநாயகர் வேடத்தில் கமல்ஹாசன் நடித்த அசதி இருந்தார்.
சாகர்:
தமிழில் கமல்ஹாசன் நடித்த மூன்றாம் பிறை திரைப்படத்தின் ரீமேக் ஆக ஹிந்தியில் உருவான திரைப்படம் தான் சாகர். ரமேஷ் சிப்பி இயக்கத்தில் கமல்ஹாசன், ரிஷிகாபூர் மற்றும் டிம்பில் கபாடியா நடித்த இந்த திரைப்படத்தின் கதை முக்கோண காதல் பற்றியது. இந்த திரைப்படம் 1985 ஆம் ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.
ஸ்வாதி முத்யம்:
பழம்பெரும் இயக்குனர் கே விஸ்வநாதன் சுவாதி முத்யம் 1986 ஆம் ஆண்டு ஆஸ்கார் விருதுக்கு நுழைந்தது. மதிப்புமிக்க போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய முதல் தெலுங்கு திரைப்படம் மற்றும் இரண்டாவது தென்னிந்திய திரைப்படம் இதுவாகும். இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் தன்னுடைய பாட்டியுடன் கிராமத்தில் வசிக்கும் மன இறுக்கம் கொண்ட நபராக நடித்திருந்தார்.
திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கீழே கிடந்த சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான…
பஞ்சாப் மாநிலத்தில் பட்டப்பகலில் தனது சிறிய மகளுடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நபரை மர்ம கும்பல் ஒன்று காரில்…
மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் கான்ஸ்டபிளைக் கார் ஒன்றில் அடித்து, போனட்டில் வைத்து 200…
வெளியாகியுள்ள அரசியல் செய்தித் தகவல்களின்படி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்று ஆறு மாதங்களை நிறைவு செய்துள்ள…
தமிழக முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்ததால் காலியாகியுள்ள திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல் களம் தற்போதைய அரசியலில் பெரும்…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி மற்றும் நடுப்பட்டு கிராம எல்லையில் வசிக்கும் கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி…