உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தங்க நகைகள் வாங்குவதற்காக பல ஆண்டுகளாகச் சேமித்த சுமார் 12 லட்சம் ரூபாயை வீட்டில் உள்ள பழைய இரும்புப் பெட்டி ஒன்றில் வைத்திருந்தார். சமீபத்தில் அந்தப் பெட்டியைத் திறந்த அவருக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது; அதிலிருந்த 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை எலிகள் முழுமையாகக் கடித்துக் குதறி, குப்பையைப் போல உருமாற்றியிருந்தன.
தங்களின் வாழ்நாள் சேமிப்பு முழுவதும் எலிகளால் வீணானதைக் கண்டு மிகுந்த மனவேதனை அடைந்த அக்குடும்பத்தினர், சேதமடைந்த நோட்டுகளை மாற்றுவதற்கான வழிமுறைகள் குறித்து வங்கி அதிகாரிகளிடம் தற்போது ஆலோசனை பெற்று வருகின்றனர். முன்னதாக அசாம் மாநிலத்திலும் ஏடிஎம் இயந்திரத்திற்குள் எலிகள் புகுந்து பணத்தை நாசமாக்கிய சம்பவம் நடந்திருப்பதால், பொதுமக்கள் தங்களின் உழைத்த பணத்தை வீடுகளில் பாதுகாப்பற்ற முறையில் வைப்பதைத் தவிர்த்து, வங்கிக் கணக்குகளில் பாதுகாப்பாகச் சேமிக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.
ஸ்விக்கி நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வரும் இளைஞர் ஒருவர், தனது கடின உழைப்பால் கிடைத்த வருமானத்தில் இருந்து சிறுகச்…
பெங்களூருவில் கடந்த 2019-ம் ஆண்டில் ஆங்கிலம் பயில வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிரோதோஷி தனகா, தான் படித்த கல்வி…
தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, தெலுங்குத் திரையுலகில் 'புஷ்பா', 'ரங்கஸ்தலம்', 'க்ஷணம்' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் முன்னணி…
ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி விம்லா…
விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி எதிர்பாராதவிதமாக வடிகால் வாய்க்காலில் நழுவி விழுந்து, மூழ்கும் அபாயத்திற்கு உள்ளானாள். நீச்சல் தெரியாததால் அவள்…
மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்கும் வகையில் இனி மாதத்தில் ஒருநாள் 'No Bag Day'…