ஒரே வீட்டில் கணவர் + காதலன்…!போலீஸ் நிலையத்தையே அதிரவைத்த மனைவியின் விசித்திர ஆசை… திக்குமுக்காடிய போலீஸ்…!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் திருமணமான ஒரு பெண், தனது கணவர் மற்றும் காதலன் ஆகிய இருவருடனும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ விரும்புவதாகக் கூறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஹ்மூதாபாத்தைச் சேர்ந்த சுபம் வர்மா மற்றும் அஞ்சு தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், அஞ்சுவிற்கு நிதின் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த கணவர் சுபம், மனைவியின் இந்தச் செயலுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இருப்பினும், அஞ்சு தனது முடிவை மாற்றிக்கொள்ளாமல் கணவர் இல்லாத நேரங்களில் காதலனை வீட்டிற்கு வரவழைத்துத் தொடர்ந்து சந்தித்து வந்ததால், இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பிரச்சினை முற்றியதைத் தொடர்ந்து சுபம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மூவரையும் நேரில் அழைத்து விசாரித்த காவல்துறையினரிடம், மனைவி யாராவது ஒருவருடன் மட்டுமே வாழ வேண்டும் அல்லது தான் வீட்டை விட்டுச் சென்றுவிடுவதாக சுபம் திட்டவட்டமாகக் கூறினார். ஆனால், அஞ்சுவோ தனது கணவர் மற்றும் காதலன் ஆகிய இருவரையும் பிரிய முடியாது என்றும், மூவரும் ஒரே வீட்டில் இணைந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்றும் பிடிவாதமாக இருந்தார். பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும், அந்தப் பெண் தனது விசித்திரமான முடிவிலிருந்து பின்வாங்காததால், எவ்வித சுமுகமான தீர்வும் காண முடியாமல் காவல்துறையினர் மூவரையும் அப்படியே திருப்பி அனுப்பி வைத்தனர்.

Gayathri

Recent Posts

பொட்டு வைக்கக்கூடாதா?… “என் அம்மாவுக்கு நடந்த அந்த கொடுமை”… கண்ணீருடன் சமூகத்தை சாடிய நடிகை அனசுயா… இணையத்தில் வெடித்த சர்ச்சை…!!

தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, தெலுங்குத் திரையுலகில் 'புஷ்பா', 'ரங்கஸ்தலம்', 'க்ஷணம்' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் முன்னணி…

8 minutes ago

சைக்கோவா இவள்?… ரத்த வெள்ளத்தில் கணவன்…உடலை கூறுபோட்ட கொடூரம்… ஹரியானாவை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி விம்லா…

15 minutes ago

“அய்யோ காப்பாத்துங்க”… திறந்தவெளி வடிகாலில் நழுவி விழுந்த சிறுமி… உயிரைப் பணயம் வைத்து தூக்கிய சிறுவன்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி எதிர்பாராதவிதமாக வடிகால் வாய்க்காலில் நழுவி விழுந்து, மூழ்கும் அபாயத்திற்கு உள்ளானாள். நீச்சல் தெரியாததால் அவள்…

17 minutes ago

BREAKING: மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்… பள்ளிகளில் இனி மாதம்… ஒரு நாள் No Bag Day… அமைச்சர் உத்தரவு…!

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்கும் வகையில் இனி மாதத்தில் ஒருநாள் 'No Bag Day'…

25 minutes ago

“மருத்துவ அறைக்குள் வெறிச்செயல்!”… கேள்வி கேட்ட கையோடு டாக்டர் மீது கொடூர தாக்குதல்… நள்ளிரவில் அரங்கேறிய பயங்கரம்…!!

மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், எலும்பியல் மருத்துவரான யோகேந்திர ஜெய்ஸ்வால் மீது நோயாளியின் மகன்…

26 minutes ago

பணம் பறிக்க நடந்த கொடூரமா?… அமெரிக்காவில் 28 வயது இந்தியர் துள்ளத்துடிக்கக் கொலை… கதறி அழும் பெற்றோர்…!!

நியூயார்க்கின் புரூக்ளின் பகுதியில் பீட்சா விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 28 வயதான இந்திய இளைஞர் குர்தீப் சிங், ஈவு…

41 minutes ago