Categories: சினிமா

மகள் இறப்பிற்கு பிறகு இளைய மகள் லாராவுடன் வெளியில் வந்த விஜய் ஆண்டனி.. வைரல் வீடியோ..!!

Spread the love

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமாக வலம் வருபவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவரது மூத்த மகளான மீரா வீட்டில் உள்ள தனது அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நுங்கப்பாக்கத்தில் உள்ள சர்ச்சில் வைத்து இறுதி பிரார்த்தனை செய்யப்பட்டதை அடுத்து மீராவின் உடல் கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறைத்தோட்டத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

சமீபத்தில் இறந்த தனது மகள் மீரா குறித்து விஜய் ஆண்டனி சோசியல் மீடியாவில் உருக்கமாக  பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ‘ என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன். தற்போது அவள் ஜாதி, மதம் , பணம் , பொறாமை அற்ற அமைதியான இடத்திற்கு சென்று இருக்கிறாள். நான் இப்பொது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்து விட்டேன் . அவள் பெயரில் நான் செய்ய போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள்’ என குறிப்பிட்டுட்டிருந்தார்.இந்த பதிவானது அனைவரது நான்கையும் கலங்கடித்தது.

 

இந்நிலையில், விரைவில் வெளியாக உள்ள தனது ரத்தம் படம் புரமோஷனுக்கு நடிகர் விஜய் ஆண்டனி தனது இளைய மகளுடன் புரோமோஷன் நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டுள்ளார். விஜய் ஆண்டனி தனது இளைய மகள் லாரா உடன் சி எஸ் அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ரத்தம் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

தமிழ் படம், தமிழ் படம் 2 உள்ளிட்ட படங்களை இயக்கிய சி எஸ் அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள ரத்தம் திரைப்படம் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், துயரமான இந்த நேரத்திலும் தன்னை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளர் மற்றும் உழைப்பை போட்ட இயக்குனர் பாதிப்பு அடையக் கூடாது என்பதற்காக புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் விஜய் ஆண்டனி. கண்கள் நிறைய சோகமும் மனது முழுக்க வலியுடனும் ரத்தம் பட ப்ரோமோஷனில் தனது இளைய மகள் லாராவுடன் கலந்து கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

“நீட் ரகசியம்னு 5 வருஷமா உதயநிதி சொன்னதுதான் பெரிய காதுகுத்து”…. சட்டப்பேரவையில் உதயநிதியை பந்தாடிய ராஜ்மோகன்…!

தமிழக அரச திட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசை ‘தாய் மாமன்…

7 minutes ago

“எங்களுக்கு வந்தா ரத்தம்… அவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?”…. இரட்டை வேடம் போடும் ஆளுங்கட்சி…. சட்டப்பேரவையில் வெடித்த உதயநிதி…..!

தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்த்திய உரையில், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கடுமையாகச் சாடியுள்ளார். முதலமைச்சரின் நேரடிக்…

12 minutes ago

என்ன CM சார் இப்படி கோட்டை விட்டுட்டீங்களே?….. கர்நாடகாவின் ‘ஒரே நாள்’ மெகா மாஸ்டர்பிளான்…. ரூ.29,679 கோடி முதலீடு… அதிர்ச்சியில் தமிழகம்….!

தென்னிந்திய மாநிலங்களுக்கிடையே தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் கடுமையான போட்டி நிலவி வரும் சூழலில், அண்டை மாநிலமான கர்நாடகா ஒரே நாளில்…

17 minutes ago

“என்னால அவன் இல்லாம வாழ முடியாது”…. கல்லூரி 5வது மாடியில் இருந்து குதித்த 19 வயது மாணவி…. அலறிய தாய்… ஸ்ரீபெரும்புதூரில் பரபரப்பு….!

ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தண்டலம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரியில், 19 வயது மாணவி ஒருவர் கட்டிடத்தின்…

26 minutes ago

“CM விஜய்? ராகுல் காந்தி?”…. அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிப்பது EPS-ஆ?…. கொளுத்திப்போட்ட RB உதயகுமார்….!

அலங்காநல்லூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசிய கருத்துகள், தேர்தல் களம் சூடுபிடித்துள்ள சூழலில் தங்களின்…

31 minutes ago

ஸ்டாலின் போட்ட ‘70 வயது’ ரூல்…. அறிவாலயத்தில் அதிர்ச்சி ரகசியம்…. மா.செ பதவிகளைப் பிடிக்க மாஜி அமைச்சர்கள் போட்ட பயங்கர ஸ்கெட்ச்….!

திமுகவில் 70 வயதைக் கடந்தவர்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடையாது என மு.க.ஸ்டாலின் அதிரடி மறுசீரமைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலை,…

35 minutes ago