மணிரத்தினத்திற்கே நோ சொன்ன ஸ்ரீகாந்த்.. இத்தனை பட வாய்ப்புகளை தவற விட்டுட்டாரா?.. பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்..!

Spread the love

கடந்த இரண்டு நாட்களாகவே போதை பொருள் வழக்கில் சிக்கியுள்ள நடிகர் ஸ்ரீகாந்த் குறித்த செய்திகள் தான் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறன. நடிகர் ஸ்ரீகாந்த் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பே சின்ன திரையில் அறிமுகமாகிவிட்டார். ஜன்னல் மரபு கவிதைகள் என்ற சீரியல் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்த சீரியலை கே. பாலசந்தர் இயக்கி இருந்த நிலையில் கடந்த 2002 ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் வெளியான ரோஜா கூட்டம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக காலடி எடுத்து வைத்தார். ரோஜாக்கூட்டம் திரைப்படம் வெற்றி அடைந்ததால் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தது.

பிறகு மனசெல்லாம், ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு உள்ளிட்ட படங்களில் நடித்த ஸ்ரீகாந்த் பார்த்திபன் கனவு படத்தில் நடித்த அதற்காக தமிழக அரசு விருது பெற்றார். பிறகு நடித்த படங்களில் தொடர் தோல்வியை சந்தித்த ஸ்ரீகாந்த் அவருடைய முதல் பட இயக்குனரான சசி மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்தார். அவர் இயக்கிய பூ திரைப்படம் ஸ்ரீகாந்துக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பிறகு நண்பன் திரைப்படத்தில் விஜயின் தோழனாக நடித்த அசத்து இருந்தார். அந்தப் படத்திற்கு பிறகு கடந்த 14 ஆண்டுகளாக ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளிவந்த ஒரு திரைப்படம் கூட வெற்றி பெறவில்லை.

இப்படியான நிலையில் போதைப்பொருள் வழக்கில் சிக்கியுள்ள ஸ்ரீகாந்த் குறித்த அடுத்தடுத்த பல உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இப்படியான நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் தமிழ் சினிமாவில் தவறவிட்ட பிளாக்பஸ்டர் பட வாய்ப்புகள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவர் ரோஜா கூட்டம் திரைப்படம் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் அதற்கு முன்னதாக அவர் ஹீரோவாக நடிக்க இருந்த திரைப்படம் 12 பி. சில காரணங்களால் அந்த பட வாய்ப்பு இவருக்கு கைகொடாமல் போக பிறகு அதில் நடிகர் ஷியாம் நாயகனாக நடித்தார். ஷியாமுக்கு இது முதல் திரைப்படம் ஆகும்.

அதனைப் போலவே லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் நாயகனாக நடித்த பிளாக்பஸ்டர் ஹிட்டான ரன் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க முதலில் ஸ்ரீகாந்த் ஒப்பந்தமாகியுள்ளார். பிறகு சில காரணங்களால் நடிக்க மறுத்ததால் மாதவன் ரன் திரைப்படத்தில் நடித்தார். இதனைத் தவிர மணிரத்தினம் இயக்கிய ஆயுத எழுத்து திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் ஸ்ரீகாந்த் தவறவிட்டார். மேலும் தேசிய விருது வென்ற நான் கடவுள், பிச்சைக்காரன், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி உள்ளிட்ட பல திரைப்படங்களின் வாய்ப்பை ஸ்ரீகாந்த் தவற விட்டுள்ளார்.

Nanthini

Recent Posts

டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு… 2,482 வங்கிப் பணியிடங்கள்… மாதம் ரூ 48,000 சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க…!

பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…

7 மணத்தியாலங்கள் ago

CM விஜய் தினமும் 20 மணிநேரம் வேலை செய்கிறார்… இணையத்தை கலக்கும் வைரல் பதிவு…!

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…

7 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளுக்கு ஜாக்பாட்… கடன் முழுவதும் தள்ளுபடி… தமிழக அரசு புதிய அறிவிப்பு…!

கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கடவுளே என்ன இது… ஒரே வெடிப்பு… அணுவெடியாய் மாறப்போகும் மினி கேஸ் கேனிஸ்டர்… கதறித் துடிக்கும் குடும்பம்… ஷாக்கிங் வீடியோ…!

மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… மிஷினை விட்டு ஓடுங்க… நொடியில் ஆபத்தை உணர்ந்து… சக தொழிலாளர்களைக் காப்பாற்றிய ஊழியர்… அதிர்ச்சி வீடியோ…!

தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, ​​எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ என்னை விட்டுடுங்கடா… கதறிய வாலிபரை நடுரோட்டில்… இழுத்துச் சென்று இரும்புத் தடியால் அடித்து… சிறுநீர் கழித்த கொடூரம்… உ .பி – யில் அதிர்ச்சி சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…

8 மணத்தியாலங்கள் ago