தமிழில் இயக்குனர் சசி இயக்கிய ரோஜா கூட்டம் திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதும் நம்பிக்கைக்குரிய இளம் நடிகராக உருவானார். அடுத்து அவர் நடிப்பில் உருவான ஏப்ரல் மாதத்தில் மற்றும் பார்த்திபன் கனவு ஆகிய திரைப்படங்களும் நல்ல வெற்றியைப் பெற்றன.
ஆனால் அதன் பிறகு தேர்வு செய்து நடித்த படங்கள் எல்லாமே அவருக்கு வெற்றியைப் பெற்றுத் தருவதில்லை. அதன் பிறகு 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு வெற்றிக்காக காத்திருக்கிறார். இதற்கிடையில் அவர் தெலுங்கில் சில படங்களில் செகண்ட் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
எதுவும் வொர்க் அவுட் ஆகாததால் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க ஆரம்பித்தார். இந்நிலையில் இப்போது அவர் நடித்துள்ள சத்தமின்றி முத்தம் தா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படமாவது அவருக்கு திருப்புமுனையாக அமையுமா என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார். இப்போது தனக்கான இடத்துக்காக அவர் போராடி வருகிறார். சிறப்பான தொடக்கம் கிடைத்தும் அவர் அதை தக்கவைத்துக் கொள்ள முடியாமல் போனதுதான் சோகம்.
இந்நிலையில் இப்போது அவர் நடிப்பில் ‘கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்’ என்ற படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது சினிமாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்தது குறித்து பேசியுள்ளார். அதில் “என்னுடைய ரோஜா கூட்டம் ரிலீஸாகி 23 ஆண்டுகள் ஆகின்றது. காலம் பறந்துவிட்டது. எல்லோருக்கும் நன்றி. கொஞ்சம் பேர் திட்டியிருப்பிர்கள். அதுவும் இருக்கும்.
சினிமாவில் ஒற்றுமை இல்லை. எல்லோரும் பிரிந்துகிடக்கிறார்கள். நடிகைகள் கொடுக்கப்படும் உடை பற்றி கவலைப்படுகிறார்கள். முடியாது என சொல்லக் கற்றுகொள்ளுங்கள். சாய் பல்லவியிடம் சென்று அந்த மாதிரி ஆடையைக் கொடுக்க முடியாது. அவர் உறுதியாக இருக்கிறார். ஒரு கொள்கையோடு வேலை செய்யவேண்டும். சினிமா எனக்கு இன்னும் வேலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. எல்லோரையும் வாழ வைக்கிறது சினிமா.” எனப் பேசியுள்ளார்.
மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…