அரசியலுக்கு வந்தா மட்டும் போதாது…. எல்லாருக்கும் மதிப்பு கொடுக்க தெரியணும்… விஜய்யின் அரசியல் குறித்து நடிகர் சூரி..!

Spread the love

நடிகர் சூரி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அவருடைய பிறந்தநாளுகாக சாமி தரிசனம் பெறுவதற்கு சென்றுள்ளார். கோவிலில்  இருந்த பக்தர்கள் சூரியை பார்த்தவுடன் செல்பி எடுத்து மகிழ்ந்துள்ளனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சூரி எல்லோருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் கூறினார். பின்பு எனக்கும் என் தம்பிக்கும் இன்று பிறந்தநாள் நாங்கள் இருவரும் இரட்டைப் பிறவிகள் என்று நெகிழ்ச்சியோடு கூறினார். என்னுடைய வளர்ச்சிக்கு எனது ரசிகர்களும் உறவினர்களும் தான் முழுக் காரணம் என்றும் , அதேபோல்  அம்மன் உணவகம் வளர்ச்சி அடைந்ததற்கு காரணம் என் அண்ணன் தம்பிகள் தான் என்றும் கூறியுள்ளார்.

மாமன் திரைப்படம் மாபெரும் வெற்றிக் கொடுத்தது. இப்பொழுது மாண்டி படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக நடிகர் சூரி தெரிவித்தார். கடலில் நடைபெறும் வீர விளையாட்டான போர்ட் ரேசிங் தான் மாண்டி படத்தின் கதைகளம். காமெடி நடிகர்கள் குறைந்து கொண்டேவருவதை குறித்த சூரியிடம் கேள்வி எழுப்பினர். திரைவுலகில் காமெடிகள் நன்றாக தான் போய்க் கொண்டிருக்கிறது இருப்பினும் அனைவருக்கும் வாய்ப்பு கொடுங்கள், அடுத்த நிறைய பேர் வரவேண்டும், எனக்கு வாய்ப்பு கொடுத்ததினால் தான் நான் இந்தளவுக்கு முன்னேறி வந்துள்ளேன்.  அதேபோல் அனைவருக்கும் வாய்ப்பு கொடுத்தால் அனைவரும் முன்னேறுவார்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதலமைச்சரை விமர்சனம் செய்ததை பற்றி நடிகர் சூரியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதைப் பற்றி நான் பேச விரும்பவில்லை, அனைவரும் அரசியலை தாண்டி எல்லோரையும் மதிக்க வேண்டும். விஜய் சினிமாவில் இருந்து ஒதுங்கி அரசியலுக்கு போனது அவருடைய விருப்பம், ஏன் அவர் திரும்பி கூட வரலாம். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும் அவருக்கும் என்னை பிடிக்கும் என்று சூரி அவருடைய கருத்தை வெளிப்படையாக பேசியுள்ளார்.

Divyamayakannan

Recent Posts

ஐயோ… கூரையையே தூக்குறானுங்க சார்… எஸ்டேட்டில் பகல் நேரத் துணிச்சல்… ஜெரார்ட் தகடுகளைக் கழற்றிய திருடன்… சிக்கியது எப்படி?… இணையத்தில் வைரல்…!

இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… நீ வீட்டுக்கு வா… சேர்த்து வைக்கிறோம்… நீதிமன்றத்தில் கல்யாணம் செய்துவிட்டு… புதுப்பெண்ணைச் சிறைவைத்த பெற்றோர்… மாடியிலிருந்து குதித்து விபரீத முடிவு… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!

காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…

3 மணத்தியாலங்கள் ago

“பரிகார அறையில் பள்ளி சீருடைகள்…” சிறுமிகளிடம் அத்துமீறிய போலி சாமியார்… லேப்டாப்பில் சிக்கிய ஆபாச வீடியோக்கள்…. அதிர்ச்சி பின்னணி…!!

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…

3 மணத்தியாலங்கள் ago

“வீட்டின் கதவில் ஏறிய கொடிய கட்டுவிரியன் பாம்பு…” நொடியில் பாய்ந்து எஜமானரின் குடும்பத்தை காப்பாற்றிய வளர்ப்பு பூனை…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…

3 மணத்தியாலங்கள் ago

அடியே… எல்லாத்தையும் உன் புருஷனுக்கு அனுப்பிட்டேன் பாரு… காதலன் செய்த கொடூரம்… மன உளைச்சலால் பெண் எடுத்த விபரீத முடிவு… உ . பி – யில் பதறவைக்கும் சம்பவம்…!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…

3 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… கடன் சுமையால் பெற்ற பிள்ளைகளுக்கு… விஷம் கொடுத்து தந்தை தற்கொலை… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…

3 மணத்தியாலங்கள் ago