தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் சசிகுமார். இவர் ஒரு திரைப்பட நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கின்றார். இவருடைய இயக்கத்தில் கலந்து 2008 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் சுப்பிரமணியபுரம். அந்தத் திரைப்படம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்பட்டது. முதல் படத்திலேயே இயக்குனராகவும் நடிகராகவும் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இவ்வாறு சமுத்திரக்கனியின் நடிப்பில் வெளிவந்த ஈசன் என்ற படத்தை எடுத்தார். அதன் பிறகு இவர் நடிகராக மட்டும் தான் நடித்து வருகின்றார்.
இவருடைய நடிப்பில் வெளியான பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளன. இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான நந்தன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சசிகுமார் நடிப்பில் அறிமுக நடிகர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்த திரைப்படத்தில் சசிகுமார் உடன் சிம்ரன், யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வருகின்ற மே 1ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பட குழுவினர் அனைவரும் ஈடுபட்டு வரும் நிலையில் சமீபத்தில் சசிகுமார் அளித்த பேட்டியில், கடந்த 2010 ஆம் ஆண்டு நான் ஒரு கதையை தயார் செய்தேன்.
அதை சூர்யா மற்றும் விஜய் இருவரிடம் சொல்லியும் அவர்கள் யாரும் அந்த படத்தில் நடிக்க தயாராக இல்லை. அந்தக் கதை இன்னும் என்கிட்ட தான் இருக்கு. அந்த கதைக்கான ஹீரோவை அந்த கதை தான் முடிவு பண்ணனும் போல இருக்கு. சரியான ஹீரோ அமைஞ்சா அந்த கதையை படமா எடுக்க நான் தயாராதான் இருக்கேன். டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஒரு கிராமத்து கதை களத்தில் படமாக எடுக்க உள்ளேன். டிசம்பர் மாதம் இறுதியில் அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும். இந்த படத்தில் நானும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என சசிகுமார் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள காரக்கோட்டை கிராமத்தில், போதை பழக்கத்தால் விளைந்த ஒரு கொடூர சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும்…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பிச்சாண்டாம்பாளையத்தில், லாரி ஓட்டுநரான தங்கராஜ் என்பவர் தனது மனைவி அமுதாவால் கொடூரமாகக் கொலை…
நடிகை ஓவியாவின் இந்த அதிரடிப் பதிவு கோலிவுட் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. நடிகர் விஜய்யின் நிழலாகச்…
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள…
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஒரு…
பிறப்புச் சான்றிதழில் வளர்ப்பு என்ற பின்னோட்டக் குறிப்புடன், பெற்றோர் பெயராகத் தன்னை வளர்த்த மாமா மற்றும் அத்தையின் பெயர்களைச் சேர்க்க…