தமிழ் சினிமா உலகில் மிகவும் பிரபலமான பாடகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் சந்தோஷ் நாராயணன். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு தினேஷ் நடிப்பில் வெளியான அட்டக்கத்தி என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே இவருடைய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து பீட்சா, சூது கவ்வும், பீட்சா 2, பில்லா மற்றும் ஜிகர்தண்டா போன்ற பல திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். மேலும் இவர் தமிழ் படங்களுக்கு மட்டுமல்லாமல் தெலுங்கு போன்ற பிறமொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இவர் தன்னுடைய இசை திறமைக்காக பல விருதுகளையும் வாங்கியுள்ளார்.
ஆரம்பத்தில் இவர் குறும்படங்களுக்கு தான் இசை அமைத்திருந்தார். அதன் பிறகு தன்னுடைய அபார வளர்ச்சியால் சினிமாவில் தன்னை ஒரு இசையமைப்பாளராக நிலை நிறுத்தியுள்ளார். தற்போது இவர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள பெற்றோர் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவரின் கன்னிமா பாடல் சென்சேஷன் பாடலாக மாறியுள்ளது. அதேசமயம் கண்ணாடிப் பூவே பாடலும் ஒட்டுமொத்த இளசுகளையும் கவர்ந்துள்ளது. இப்படியான நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், கல்கி 2 திரைப்படத்திற்கு இசையமைப்பதற்கான வாய்ப்பை நான் கேட்டபோது அவங்க மறுப்பு தெரிவிச்சுட்டாங்க.
என்னை தேடி வரும் படங்களில் தான் பெரும்பாலும் இசையமைத்து வருகிறேன். ஒருமுறை கார்த்திக் சுப்புராஜிடம் நாம ரெண்டு பேரும் சேர்ந்து பண்ணலாம் என்று ரஜினியின் பேட்டை திரைப்படத்திற்கு கேட்டேன். அவரும் சரி சொல்றேன் என சொன்னார். என்ன கார்த்தி இப்படி சொல்ற என நினைத்தேன். ஆனால் அப்போது அனியின் பெரிய பாம் வெடித்தது. சரி யூத்தோட வொர்க் பண்றதும் ஒரு மாதிரியான சூழல், அதுவும் நல்லா தானே இருக்கும். அது பெரிய ஹிட் ஆச்சு. அதன் பிறகு யாரிடமும் நானே போய் கேட்கிறதே இல்லை என்று சந்தோஷ் நாராயணன் பேசியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சிங் என்ற…
பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் தனது கேப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் பயமுறுத்தும் அனுபவத்தை…
இந்தியக் குடும்பங்களில் இன்றும் தொடரும் பழமைவாதத் திருமணச் சிந்தனைகளை ரஷ்மி ராஜ் என்ற இளம் பெண் சமூக வலைதளத்தில் வீடியோவாகப்…
சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…
தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…