
VIDEOS
சரத்குமாருக்கு இப்படி ஒரு சகோதரி உள்ளாரா?.. பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அவரே வெளியிட்ட வீடியோ..!!
தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னணி நடிகராக சிறந்து விளங்கியவர் சரத்குமார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் அரசியல்வாதி, இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் பாடி பில்டர் ஆகவும் இருப்பவர். இவர் முதன் முதலில் கண் சிமிட்டும் நேரம் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சூரியன், வைதேகி கல்யாணம் மற்றும் சேரன் பாண்டியன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தார்.
அந்தத் திரைப்படங்கள் இவருக்கு மாபெரும் வெற்றியை தேடி தந்தன. இதுவரை 130 க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் இறுதியாக விஜயின் வாரிசு மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.
இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வரும் சரத்குமார் தமிழக அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் சரத்குமாருக்கு உடன்பிறந்த ஒரு சகோதரி உள்ள நிலையில் அவர் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சரத்குமார் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க