திரை உலகில் முன்னணி ஹீரோவாக வலம் அஜித் இன்று தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் அன்னதானம், ரத்த தானம், மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர். பிறந்த நாள் கொண்டாடும் அஜித்திற்கு நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தற்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் அஜித் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கியது. அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். வருகிற ஜூன் மாதம் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகும் படங்களின் அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வருவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் இந்த நிலையில் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்த பழைய படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் அஜித் நடித்த தீனா, மங்காத்தா, பில்லா ஆகிய படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பத்தால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
அமர்க்களம் படத்தில் நடித்த போது நடிகர் அஜித் ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர். நடிகர் அஜித்துக்கு எப்போதுமே கார், பைக் மீது அதீத பிரியம். கார் மற்றும் பைக் பந்தய வீரரான அஜித்துக்கு விதவிதமான வாகனங்கள் மிகவும் பிடிக்கும்.
இந்த நிலையில் ஷாலினி அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக டுகாட்டி பைக்கை வாங்கி பரிசளித்துள்ளார். அந்த பைக்கின் விலை 30 லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இன்று பிறந்தநாள் கொண்டாடும் அஜித்திற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே அஜித் மனைவி ஷாலினியுடன் திருமண நாளை கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கதாகும்.
Shalini Mam Gifted Ducati Bike For Our Chief #Ajithkumar #HBDAjithKumar || #AK53 pic.twitter.com/y5Nm022UQN
— VINAYAK MAHADEV⚡ (@VigneshUniversX) May 1, 2024