தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் சந்திப் கிஷன். தெலுங்கில் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் தமிழில் யாருடா மகேஷ் என்ற திரைப்படம் மூலமாகத்தான் நடிகராக முதன் முதலில் அறிமுகமானார். அந்தத் திரைப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அடுத்ததாக மாநகரம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம்தான் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். இவருடைய நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் அடுத்தடுத்து இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்தது. அதன்படி நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன் மற்றும் கசடதபற ஆகிய திரைப்படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.
பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களின் பேராதரவை பெற்றார். என்னதான் இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியிலும் சினிமாவிலும் தனக்கென ஒரு பெயரை பெற்றது தனுஷின் ராயன் திரைப்படத்தில் முத்துவேல் ராயன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தான். குறிப்பாக அந்த படத்தில் இடம்பெற்ற “நீ இருக்கிறியே ஓல கோட்டாயா” பாடல் மூலம்தான். இந்தத் திரைப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பு தொடர்ந்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார்.
தமிழிலும் தெலுங்கிலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றார். இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தெரிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் சந்திப் கிஷன் தன்னுடைய அம்மாவின் பிறந்த நாளுக்கு புதிய கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். தன் அம்மா தனக்காக இதுவரை எதையும் கேட்டதில்லை என்றும் ஒரு கார் மீது மட்டுமே தனக்கு ஆசை என்று அவர் தன்னிடம் கேட்டதாகவும் தற்போதும் தினமும் ஆல் இந்தியா ரேடியோவில் தனது வேலையை அவர் தொடர்வதாகவும் கூறி ஒரு பதிவை சந்தித்துள்ள நிலையில் தற்போது அந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…