Categories: சினிமா

எம்ஜிஆரின் மனைவி எனக்கு முறைப்பெண்… நான்தான் ஜானகியை திருமணம் செய்திருக்க வேண்டும் – பிரபல நடிகர் சொன்ன பகீர் தகவல்!

Spread the love

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் ரமேஷ் கண்ணா. சமீபத்தில் நேர்காணலில் பேசிய நடிகர் ரமேஷ் கண்ணா கூறியதாவது, ஜானகி எங்களுக்கு உறவுக்காரர். ஜானகி என் அப்பாவின் அக்காவின் மகள். அதாவது எனக்கு அத்தை மகள். எனக்கு முறைப்பெண்தான். நானும் எம்ஜிஆரும் சகலை. நான் திருமணம் செய்ய வேண்டிய பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டார். ஆனால் ரொம்ப வயது வித்யாசம் உண்டு.

அப்போதே எங்கள் குடும்பத்திற்கும் அவர்கள் குடும்பத்திற்கும் பிரச்சனை இருந்தது. எம்.ஜி.ஆர் ஜானகியை திருமணம் செய்ய என் அப்பா சம்மதிக்கவில்லை. அவர்கள் திருமணத்துக்கு எதிராக வழக்கு தொடுத்து அதில் வெற்றி பெற்று அவர்கள் இருவரும் 14 ஆண்டுகள் கணவன் மனைவியாக வாழக்கூடாது என்று என்னுடைய அப்பா உத்தரவு பெற்றார்.

அதற்கு பின்னால் அவர்கள் இருவரும் ஒன்றாக தான் இருந்தார்கள். அதெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது. அவர்கள் இருவரும் கணவன் மனைவியாக வாழலாம் என்று சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டது 1962க்கு அப்புறம்தான். என்னுடைய அப்பா தான் ஜானகியை கும்பகோணத்தில் இருந்து, ஜானகியின் 13 வயதில் அவரை அழைத்து வந்தார். ஜானகிக்கு நடனம் சொல்லிக் கொடுத்து நடிப்பு சொல்லிக் கொடுத்து நடிகையாக மாற்றியது எல்லாமே எனது அப்பா தான்.

எம்ஜிஆரின் நான் ஏன் பிறந்தேன் புத்தகம் படித்தால் அதில் அவர் எனது அப்பா குறித்து நிறைய எழுதி இருப்பார். அந்த புத்தகத்தில் கார்டியன் கார்டியன் என்று எம்ஜிஆர் குறிப்பிட்டு எழுதி இருப்பது எல்லாம் எனது அப்பாவை தான். எனது அப்பாவிடம் எம்ஜிஆர் பெண் கேட்டு வரும்போது அப்பா கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டு சிகரெட் பிடித்துக் கொண்டு பேசினார். அப்பாவுக்கு பின்னால் இருந்த ஜானகி சண்டை போட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் அதில் எம்ஜிஆர் குறிப்பிட்டு இருப்பார் என்று ரமேஷ் கண்ணா அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

Elango

Recent Posts

டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு… 2,482 வங்கிப் பணியிடங்கள்… மாதம் ரூ 48,000 சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க…!

பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…

5 மணத்தியாலங்கள் ago

CM விஜய் தினமும் 20 மணிநேரம் வேலை செய்கிறார்… இணையத்தை கலக்கும் வைரல் பதிவு…!

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…

5 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளுக்கு ஜாக்பாட்… கடன் முழுவதும் தள்ளுபடி… தமிழக அரசு புதிய அறிவிப்பு…!

கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கடவுளே என்ன இது… ஒரே வெடிப்பு… அணுவெடியாய் மாறப்போகும் மினி கேஸ் கேனிஸ்டர்… கதறித் துடிக்கும் குடும்பம்… ஷாக்கிங் வீடியோ…!

மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… மிஷினை விட்டு ஓடுங்க… நொடியில் ஆபத்தை உணர்ந்து… சக தொழிலாளர்களைக் காப்பாற்றிய ஊழியர்… அதிர்ச்சி வீடியோ…!

தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, ​​எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ என்னை விட்டுடுங்கடா… கதறிய வாலிபரை நடுரோட்டில்… இழுத்துச் சென்று இரும்புத் தடியால் அடித்து… சிறுநீர் கழித்த கொடூரம்… உ .பி – யில் அதிர்ச்சி சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…

6 மணத்தியாலங்கள் ago