காய்கறி சந்தை அல்லது கடையிலிருந்து காய்கறிகளை வாங்கி வந்தவுடன் எல்லா விதமான காய்கறிகளையும் பிரிட்ஜில் வைப்பது பலரது வழக்கமாக உள்ளது. பிரிட்ஜை பொருத்தவரை அதில் வைக்கப்படும் உணவு பொருட்களை குளிர்ச்சியாக வைத்திருக்கும். நீண்ட நேரம் கெடாமல் பாதுகாக்கும்.
ஆனால் ஒவ்வொரு பருவத்திற்கும் பிரிட்ஜை வெவ்வேறு விதமாக கையாள வேண்டும். காய்கறிகளின் தன்மைக்கு ஏற்றவாறு அவற்றை பிரித்து ஸ்டோர் செய்ய வேண்டும். குறிப்பாக குளிர்காலத்தில் சில காய்கறிகளை பிரிட்ஜில் வைக்கவே கூடாது. இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அந்த காய்கறிகள் குறித்து இப்போது தெரிந்து கொள்ளலாம்.
தக்காளி – தக்காளி பழத்தை பிரிட்ஜில் வைக்கவே கூடாது. அதனால் தக்காளியின் சுவைத்தன்மை சுத்தமாக மாறிவிடும். தக்காளி பழத்தில் இருக்கும் பண்புகள் அழிந்துவிடும். தக்காளியை வெளியில் வைத்து பயன்படுத்த வேண்டும்.
உருளைக்கிழங்கு – உருளைக்கிழங்கை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தினால் உடல் நலத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும். உருளைக்கிழங்கை பிரிட்ஜில் வைத்தால் அது மிக வேகமாக முளை கட்ட தொடங்கும். அதில் இருக்கும் ஸ்டார்ச் நேரடியாக சர்க்கரையாக மாறும். நீரிழிவு பிரச்சினை உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கூட இது தீங்கை விளைவிக்கும்.
இஞ்சி – பிரிட்ஜில் இஞ்சியை வைக்க கூடாது. குளிருக்கு இதமாக இஞ்சி டீ கசாயம் போன்றவற்றை பயன்படுத்த இஞ்சியை அதிகமாக பயன்படுத்துவோம். பிரிட்ஜில் வைக்கப்படும் இஞ்சியில் பூஞ்சை காளான்கள் வந்துவிடும். இது வேகமாக கெட்டுப் போகும். இப்படிப்பட்ட இஞ்சியை பயன்படுத்தும் போது கல்லீரல், சிறுநீரங்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.
கீரை – கீரையை வாங்கி அப்படியே பிரிட்ஜில் ஸ்டோர் செய்யக்கூடாது. அப்படியே செய்தாலும் 12 மணி முதல் 24 மணி நேரத்துக்குள் எடுத்து சமைத்து விட வேண்டும். இப்படி செய்யாமல் விட்டால் கீரையில் உள்ள இயற்கையான சுவை மற்றும் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறைந்து விடும்.
காலிபிளவர் கேரட் தேன் உள்ளவற்றையும் கூட பிரிட்ஜில் வைக்க கூடாது. இதனால் அதன் தன்மை பாதிக்கப்படும். குளிர் காலத்தில் பருவநிலைக்கு ஏற்றபடி காய்கறிகளை பிரிட்ஜில் ஸ்டோர் செய்ய வேண்டும். அப்போதுதான் அந்த காய்கறிகளின் தன்மை மாறாமல் உடல் ஆரோக்கியத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்.
பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…
கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…
மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…
தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…