#image_title
தெகிடி, மேயாத மான் உள்ளிட திரைப்படங்களில் நடித்த பிரதீப் விஜயன் வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு மிர்ச்சி சிவா வசுந்தரா ஆகியோர் நடிப்பில் வெளியான சொன்னா புரியாது என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர்தான் பிரதீப் கே விஜயன். பின்னர் பல திரைப்படங்களில் நடித்து வந்துள்ளார். தொடர்ந்து தெகிடி திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை கொடுத்தது.
அதன் பின்னர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஒரு நாள் கூத்து, என்னோடு விளையாடு, மீசையை முறுக்கு, மேயாத மான், நெஞ்சில் துணிவிருந்தால், திருட்டுப் பயலே 2, இரும்புத்திரை, ஆடை, கென்னடி கிளப் ,ஹீரோ, மனம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். கடைசியாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த ருத்ரன் திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார்.
பி.டெக் பட்டதாரியான இவர் நடிப்பை தாண்டி பல படங்களுக்கு சப் டைட்டில் போட்டு கொடுக்கும் பணியையும் செய்து வந்தார். சினிமா மீது இருந்த ஆர்வம் காரணமாக தன்னை ஒரு நடிகராக மாற்றிக்கொண்டார். சென்னை பலாவாக்கத்தில் தனியாக வசித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களாக அவரது நண்பர்கள் இவருக்கு போன் செய்த நிலையில் போனை அவர் எடுக்கவில்லை.
பின்னர் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று கலவை தட்டிப் பார்த்தபோது கதவு உள்பக்கம் தாப்பாழ் போடப்பட்டிருந்தது. மேலும் துர்நாற்றம் அதிகமாக வந்ததால் காவல்துறையினருக்கு அவரது நண்பர்கள் தகவல் அளித்துள்ளனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே போய் பார்த்தபோது இறந்த நிலையில் பிரதீப் கே விஜயன் கிடந்துள்ளார்.
அவர் மாரடைப்பு காரணமாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது . இருப்பினும் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரேத பரிசோதனையில் தான் இவருக்கு என்ன நடந்தது என்பது தெரிய வரும். இரண்டு நாட்களாக வீட்டுக்குள் இறந்து கிடந்த இவரது உடல் தற்போது பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…
கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…
மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…
தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…