Categories: சினிமா

என் குழந்தை அப்படி ஒன்னும் இறக்கவில்லை.. 3 வயது மகனின் மரணம் குறித்து உருக்கமாக பேசிய பிரகாஷ்ராஜின் முதல் மனைவி..!

Spread the love

பிரகாஷ்ராஜின் முதல் மனைவியான லலிதா ராஜகுமாரி ஒரு பேட்டியில் தனது மகனின் இறப்பு குறித்து பேசி இருக்கின்றார். அந்த வீடியோ தற்போதைய இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் லலிதா. அதனைத் தொடர்ந்து மாப்பிள்ளை, புலன்விசாரணை, புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் பிரபல கவர்ச்சி நடிகையான டிஸ்கோ சாந்தியின் தங்கை ஆவார். நடிகர் பிரகாஷ் ராஜும், லலிதாவும் 1994 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமாகி 16 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். சிறந்த தம்பதிகளாக வளம் வந்த இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக 2009 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிறந்தன. நடிகர் பிரகாஷ்ராஜ் தமிழ் சினிமாவில் பிரபல வில்லனாக வலம் வந்தவர். தமிழ்மொழி மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் சிறந்த நடிகராக வலம் வருகிறார்.

இவர் தனது மனைவி லலிதாவை விவாகரத்து பெற்று பிரிந்த பிறகு 2-வதாக அவர் திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தையை பெற்றிருக்கின்றார். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் தலை காட்டாமல் இருந்து வந்த லலிதா குமாரி ஒரு பேட்டி ஒன்றில் தன் வாழ்வில் நடந்த பல விஷயங்களைப் பற்றி பேசியிருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது நான் வெளிநாட்டில் இருந்து சினிமாவிற்கு வரவில்லை, எனது அப்பா விஜயபுரி ஆனந்தன்.

இவர் கதாநாயகனாக பலப்படங்களில் நடித்திருக்கின்றார். என் குடும்பம் சினிமாவில் இருந்தாலும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வரவில்லை. ஒரு முறை பாலச்சந்திரனுக்கு வாழ்த்து சொல்வதற்கு தங்களது குடும்ப போட்டோவை அனுப்பி இருந்தோம். அதை பார்த்த அவர் என் பெரிய அக்காவை நடிக்க கூப்பிட்டார். அப்போது அவருக்கு திருமணமான காரணத்தினால் அடுத்ததாக என்னை அழைத்தார்.

நான் அப்போது ஒன்பதாம் வகுப்பு தான் படித்துக் கொண்டிருந்தேன். சினிமாவில் நடிக்க எனக்கு ஆசையே இல்லை. பிரகாஷ்ராஜ் கீதா மேடம் மூலமாக பாலச்சந்திரன் பார்க்க வைத்தார். அப்போதுதான் முதன்முதலாக நான் பிரகாஷ்ராஜை பார்த்தேன். அப்போது பழகி மூன்று மாதத்தில் தங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது. டூயட் படம் முடிந்ததும் திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு பூஜா, மேக்னா என்று இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

#image_title

16 வருடம் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தோம் எங்களுக்குள் சிறிய விரிசல் ஏற்பட்டது இருவருமே உட்கார்ந்து பேசி விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம். இந்த விஷயம் அனைவருக்கும் தெரிந்ததுதான் எங்களுக்கு ஒரு மகன் பிறந்தான். ஆனால் 3 வயது இருக்கும் போது எனது மகன் இறந்துவிட்டான். சோகத்திலேயே மிகப்பெரிய சோகம் புத்திர சோகம் தான் என்னால் அந்த சம்பவத்திலிருந்து மீண்டு வர முடியவில்லை.

எனது குழந்தை நீச்சல் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்து விட்டதாக பலரும் கூறினார்கள். ஆனால் அது உண்மை கிடையாது. ஒரு சிறிய தொட்டி ஒன்று இருந்தது. அதற்கு மேல் நின்று எனது மகன் பட்டம் விட்டு கொண்டு இருந்தான். அப்போது கால் தவறி அந்த தொட்டிக்குள் விழுந்து நெற்றியில் மிகப்பெரிய அடிப்பட்டது. பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பார்த்தோம். சிறிது வீக்கம் தான் ஒன்றும் இல்லை என்று கூறி விட்டார்கள். அதை தொடர்ந்து ஒரு மாதத்திற்குள் ஒரு காய்ச்சல் வந்தது.

பின்னர் மீண்டும் மருத்துவமனைக்கு சென்றோம் இரண்டாவது முறை காச்சல் வரும்போது அவருக்கு பிக்ஸ் வந்துவிட்டது. இதில் அவர் உயிரிழந்து விட்டார், இந்த சோகம் என்னை மிகப் பெரிய அளவில் பாதித்தது. விவாகரத்து பெற்ற பிறகு மிகப்பெரிய மன அழுத்தத்தில் இருந்தேன். எனது மகள்கள் என் கூட இருந்து என்னை தேற்றினார்கள். இதுதான் என் வாழ்க்கை என்று முடிவு செய்து விட்டேன். இந்த உலகத்திற்கு தனியாகத்தான் வந்தோம், தனியாகத்தான் போகின்றோம் இடைப்பட்ட எந்த உறவும் நிரந்தரமல்ல என்பதை புரிந்து கொண்டேன்” என்று அவர் தெரிவித்திருந்தார்.

Mahalakshmi

Recent Posts

“பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு…! SBI வங்கியில் 1,500 பணியிடங்கள்… விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே…!”

1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…

5 மணத்தியாலங்கள் ago

பேப்பர் பேனாவுக்கு ₹986 கோடி செலவிட்ட SBI… டிஜிட்டல் உலகிலும் தொடரும் ஸ்டேஷனரி செலவு…!!

பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…

6 மணத்தியாலங்கள் ago

போன்பே பயன்படுத்துபவரா நீங்கள்..? இனி ₹100 அபராதம்… புதிய அதிரடி உத்தரவு…!!

போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…

6 மணத்தியாலங்கள் ago

“டிகிரி முடிச்சவங்களுக்கு எஸ்பிஐ கொடுத்த ஜாக்பாட்.. 1,500 காலியிடங்கள்.. கடைசி தேதி எப்போது தெரியுமா?.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…

6 மணத்தியாலங்கள் ago

“இப்படியும் கூட சம்பாதிக்கலாமா?.. ஒரு ரீல்ஸுக்கு ரூ.76 லட்சம்.. பார்ட்டிக்கு வர ரூ.25 லட்சம்.. ஓரியின் ‘மாஸ்’ பிசினஸ் மாடல்..!!

முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…

6 மணத்தியாலங்கள் ago

திமுகவில் இருந்து விலகும் செந்தில் பாலாஜி..? அதிமுக போட்ட ரகசிய ப்ளான்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!”

திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…

6 மணத்தியாலங்கள் ago