Connect with us

CINEMA

வெளிநாட்டிற்கு தனது மகனுடன்… சுற்றுலா சென்றுள்ள நடிகர் பிரபுதேவா… வைரலாகும் அழகிய புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் பிரபுதேவா. இவர் நடிகராக மட்டுமே இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை தன்னுள் கொண்டவர். நடனத்தில் மைக்கேல் ஜாக்சன் எனவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். இவரது நடனத்திற்கு இன்று வரை ரசிகர்கள் பலரும் அடிமை என்றே கூறலாம். இவரை போல நடனமாட வேண்டும் என நடன கலைஞர்கள் பலர் தற்பொழுது வரை முயன்று வருகின்றனர்.

   

இவரது இடத்தை எவராலும் பிடிக்க முடியவில்லை. நடிகர் பிரபுதேவா தமிழ் திரையுலகில் ஹிந்து என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இத்திரைப்படம் அவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை தரவில்லை. இதை தொடர்ந்து இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ‘காதலன்’ என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இத்திரைப்படம் அவரது திரைவாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்றே கூறலாம். காதலன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் மிகப் பிரபலமானார் நடிகர் பிரபுதேவா. இதை தொடர்ந்து தனது நடனத் திறமையை வெளிப்படுத்தி பல வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்துள்ளார் நடிகர் பிரபுதேவா.

இவர் நடிகராக மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் படங்களை இயக்கி இயக்குனராகவும் வெற்றி கண்டுள்ளார். சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகர் பிரபுதேவா.

இவர் தற்பொழுது தனது மகனுடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு தன் மகனுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இப்புகைப்படங்கள் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

Continue Reading

More in CINEMA

To Top