தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகராக வலம் வருபவர் நடிகர் பொன்னம்பலம். இவர் முதன் முதலில் ஸ்டண்ட் மேனாக தனது திரைப்பயணத்தை தொடங்கினார். இதன்பின் அபூர்வ சகோதரர்கள், நாட்டாமை உள்ளிட்ட பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். இவர் தனது உடல் அமைப்பு மற்றும் கம்பீரமான பேச்சால் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் பலத்த வரவேற்பை பெற்றார்.
1988 ல் வெளியான ‘கலியுகம்’ திரைப்படத்தில் ஜெயில் கைதியாக ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானார். இவர் தற்பொழுது வரை கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைபடங்களில் நடித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
சமீப காலமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு நடிகர் பொன்னம்பலம் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு பல்வேறு திரைபிரபலங்களும் உதவி செய்து வருகின்றனர் இந்நிலையில் அவர் பேசிய பழைய பேட்டி ஒன்று இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் , ‘ நடிகர் விஜயகாந்தை பற்றி பெருமையாக கூறிய அவர் ,
இன்று அவர் மட்டும் நல்ல நிலைமையில் இருந்திருந்தால் எனக்கு இதுபோன்ற நிலை வந்திருக்காது என்றும், 5 கிலோ நல்லி எலும்பை அசால்டாக நான் சாப்பிடுவேன் என்றும் கூறியுள்ளார்’ அவரின் இந்த பேட்டியானது தற்பொழுது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ….
சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில் உள்ள சக்ரதர் நகர் பகுதியில், நள்ளிரவில் வீட்டின் ஜன்னல் ஏசி கம்ப்ரெஸர் திடீரென பயங்கர…
தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் தோல்வி…
தமிழ் சினிமாவின் "திரைக்கதை மன்னன்" என்று போற்றப்படும் மூத்த இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் (73) இன்று காலை காலமானார். கோவாவில்…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திடம் ஆட்சியைப் பறிகொடுத்த அதிர்ச்சியில் இருந்து திமுக இன்னும் மீளவில்லை. தேர்தல் பிரச்சாரக்…
தமிழ் திரையுலகில் அசாத்தியமான கதை சொல்லும் முறையாலும், எளிய மனிதர்களின் சாதாரண வாழ்க்கையைச் சுவாரஸ்யமான திரைக்கதையாக மாற்றுவதிலும் வல்லவரான 'திரைக்கதை…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரும், நடிகரும், திரைக்கதை மன்னனுமான கே. பாக்யராஜ் (73) அவர்கள் இன்று மாரடைப்பால் காலமானார். சென்னை…