பிரபல நடிகரான முரளி பெங்களூரைச் சேர்ந்தவர். 99 படங்களில் முரளி கதாநாயகனாக நடித்துள்ளார். முதல் முதலில் பூவிலங்கு என்ற திரைப்படம் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இந்த படம் 1984-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்த பகல் நிலவு திரைப்படம் அவருக்கு நல்ல பெயரைத் தந்தது. அதன் பிறகு முரளி நடித்த புது வசந்தம், இதயம் கடல் பூக்கள் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் ஆனது.
கடல் பூக்கள் திரைப்படத்தில் நடித்ததற்காக முரளிக்கு தமிழக அரசின் சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. முரளி முன்னணி நடிகர்களான சிவாஜி கணேசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், பிரபுதேவா, கார்த்திக், பார்த்திபன், சரத்குமார் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் முன்னணி நடிகைகளான மீனா, ரோஜா, சிம்ரன், தேவயானி, லைலா, ரம்பா உள்ளிட்டோருடன் இணைந்து நடித்துள்ளார். எதிர்பாராத விதமாக முரளி 2010 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
தற்போது முரளியின் வாரிசுகளான அதர்வா மற்றும் ஆகாஷ் ஆகிய இருவருமே தமிழ் சினிமாவில் நடிகர்களாக உள்ளனர். கர்நாடகாவைப் பூர்விகமாகக் கொண்டிருந்தாலும் முரளி அதிகமாக நடித்தது தமிழ் படங்களில்தான். அவரைக் கதாநாயகனாக ஏற்றுக் கொண்டதும் தமிழ்நாட்டு மக்கள்தான்.
இந்நிலையில் சிறு வயதில் இருந்தே தனக்கு இருந்த தாழ்வு மனப்பாண்மை குறித்து முரளி பழைய நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். அதில் “எங்கள் குடும்பத்தில் மூன்று தலைமுறைகளாக எல்லா ஆண்களும் கருப்பாகவே இருந்தோம். அதனால் அது எனக்கு ஒரு தாழ்வு மனப்பாண்மையைக் கொடுத்தது. அதனால் நான் திருமணம் செய்யும் பெண் வெள்ளையாக இருக்கவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தேன். அப்படிதான் என் மனைவியைத் திருமணம் செய்தேன். இப்போது என் குழந்தைகள் கலராக இருப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.
இந்தியாவில் இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவது நாட்டின் எதிர்காலத்திற்கு விடுக்கப்பட்டுள்ள பெரும் அச்சுறுத்தலாகும். குறிப்பாக, 'ஜாம்பி டிரக்' போன்ற…
நள்ளிரவு 12 மணி இருக்கும், தன் காதலனிடம் ஏற்பட்ட மனக்கசப்பிற்காக மன்னிப்பு கேட்க எண்ணிய ஒரு இளம் பெண், நேராக…
உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில், பல லட்சம் ரூபாய் செலவு செய்து கோலாகலமாக நடந்த ஒரு திருமணம், தற்போது…
டெல்லி படேல் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில், இரட்டை குழந்தைகளைப் பெற்றெடுத்த சில மணி நேரங்களிலேயே 35 வயதான ஷிவாங்கி…
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில், காவல்துறை சீருடையைத் தவறாகப் பயன்படுத்திய இளைஞர் ஒருவரின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சஹாதேய்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்த ஒரு படகு விபத்தில், உயிரிழந்த தாய் மற்றும் மகனின் உடல்கள் ஒன்றையொருவர் இறுக்கமாகக்…