சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் ஒன்று தான் எதிர்நீச்சல். திருச்செல்வன் இயக்கத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. பெண் அடிமை மற்றும் ஆணாதிக்கம் போன்ற விஷயங்களை மக்களுக்கு சீரியல் எடுத்துக்காட்டி வருகின்றது. அதிலிருந்து வீட்டுப் பெண்கள் எப்படி வெளியே வருகிறார்கள் என்ற விழிப்புணர்வை தான் இந்த சீரியல் மக்களுக்கு காட்டி வருகிறது.
ஜீவானந்தத்திடமிருந்து சொத்துக்கள் அனைத்தையும் எப்படி வாங்குவது என்ற யோசனையில் குணசேகரன் இருக்கும் நிலையில் அவர் சொத்திற்காக அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று பரபரப்பான திருப்பங்களுடன் சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. மறுபக்கம் ஆதிரையை ஹனிமூன் அனுப்பி வைப்பதாக குணசேகரன் கூற பிரச்சனை செய்ய வந்த ஜான்சி ராணி அமைதியாகிவிட்டார். இந்த சீரியலில் மிகவும் பிரபலமான கதாபாத்திரம் தான் ஆதி குணசேகரன் கதாபாத்திரம்.
இதில் அனைவராலும் ரசிக்கப்பட்ட மாரிமுத்து சமீபத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரின் மரணம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ள நிலையில் குணசேகரன் ஆக மாரிமுத்து நடித்த எதிர்நீச்சல் கடைசி எபிசோட் இதுதான் என்று நடிகர் கமலேஷ் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதுவும் கலகலப்பான ஜாலியான எபிசோடில் மாரிமுத்து நடித்து முடித்துள்ளார். அதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.