சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல். இந்த சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையே நடக்கும் பாச போராட்டத்தை மையமாகக் கொண்ட கதை தான் எதிர்நீச்சல் சீரியல். கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்துபவர்களுக்கு மத்தியில் பெண்கள் போராடுவது தான் இந்த சீரியலின் கதை. இந்த சீரியலில் வில்லனாக மிரட்டி வருபவர் தான் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் மாரிமுத்து.
இவர் சீரியலில் நடிக்கும் கதாநாயகி மற்றும் கதாநாயகனை காட்டிலும் அதிகமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். சீரியலில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதற்கு முன்பு இவர் வெள்ளித்திரையிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கொடி கட்டி பறந்து கொண்டிருந்தார்.
இந்த சீரியலில் அவர் தனது வில்லத்தனமான நடிப்பை எதார்த்தமாக காட்டி வந்தார். சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் மாரிமுத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கதாகும். இவர் தனது சொந்த மாமன் மகளான பாக்கியலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இவர் இன்று காலை மாரடைப்பால் காலமானார். சீரியல் டப்பிங் பேசிக் கொண்டிருந்த போது மாரிமுத்து மயங்கி விழுந்தார். அவரை வடபழனியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாரிமுத்து உயிரிழந்தார். அவரது பிரிவை தாங்காமல் அவரது மகன் கதறி அழும் வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் நம் மனமும் சேர்ந்தே கலங்குகிறது. இதோ அந்த வீடியோ…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், கோவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்த ஆந்திர முதல்வர்…
மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில், சுமார் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரைகளுடன் அஸ்வினி…
திரையுலகில் ஒரு நடிகரின் சந்தை மதிப்பைத் தீர்மானிப்பதில் அவர் வாங்கும் சம்பளம் முக்கியப் பங்கு வகிக்கிறது. நடிகர் விஜய் தனது…
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், தனது மகளின் காதல் விவகாரத்தால் ஆத்திரமடைந்த தந்தை ஒருவர், மகளைக் கழுத்தை நெரித்துக் கொலை…
ஈரானின் அணுசக்தி நிலையங்களை முடக்கும் நோக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து "ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்" என்ற பெயரில்…
மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில், ஒருதலைக் காதலால் நிகழ்ந்த கொடூரமான பழிவாங்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னைத் திருமணம் செய்து…