Categories: சினிமா

டப்பிங் ரூமில் நடந்தது என்ன…? நடிகர் மாரிமுத்து பேசிய கடைசி வார்த்தை…. உடனிருந்த கமலேஷ் கூறிய தகவல்…!!

Spread the love

எதிர்நீச்சல் தொடரின் மூலம் பிரபலமான நடிகர் மற்றும் இயக்குனர் மாரிமுத்து(57) மாரடைப்பால் காலமானார். இவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் மாரிமுத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கதாகும். சீரியல் டப்பிங் பேசிக் கொண்டிருந்த போது மாரிமுத்து மயங்கி விழுந்தார்.

அவரை வடபழனியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாரிமுத்து உயிரிழந்தார். நடிகர் மாரிமுத்து இறப்பதற்கு முன்பாக பேசிய வார்த்தைகள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. டப்பிங் பேசும்போது அந்த அறையில் ஏசி இல்லாததால் நடிகர் மாரிமுத்துவுக்கு அசௌகரியமாக இருந்துள்ளது.

இதுபற்றி ஆடியோ இன்ஜினியரிடம் கூறிவிட்டு மாரிமுத்து வெளியே வந்துள்ளார். பின்னர் நடிகர் கமலேஷ் கேட்டபோது ஒரு மாதிரி அசௌகரியமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். உடனே மாரிமுத்து தனது மகளை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார். பிறகு அவரே அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு காரை ஓட்டி சென்றார்.

அந்த மருத்துவமனை வாசலிலேயே நடிகர் மாரிமுத்து நிலைதடுமாறினார். உடனடியாக அவருக்கு மருத்துவமனை நிர்வாகத்தினர் சிகிச்சை அளித்தனர். ஆனாலும் மாரிமுத்துவை காப்பாற்ற இயலவில்லை. அவரது இறப்பு திரை துறையினரையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

admin

Recent Posts

“கணவரின் ஆணுறுப்பை வெட்டி பார்பிக்யூ சாஸ் ஊற்றி சமைத்த மனைவி”…. திருமணமான 30-வது நாளில் நடந்த கொடூரம்…. அதிரவைக்கும் வாக்குமூலம்…!

1991-ம் ஆண்டு அக்டோபர் மாதம், கலிபோர்னியாவின் ஹண்டிங்டன் பீச்சில் உள்ள ஒரு விடுதியில் 56 வயதான விமானி பில் நெல்சனை,…

6 minutes ago

“பெற்றோர் இல்லாத நேரம்.. மிரட்டி மிரட்டி வன்கொடுமை”… 15 வயது சிறுமியை சீரழித்த தாய்மாமன்.. தமிழகத்தை உலுக்கிய சம்பவம்…!

செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் பகுதியில் வசித்து வரும் கட்டிடத் தொழிலாளி தம்பதியினரின் 16 வயது மகள் காவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).…

26 minutes ago

“தனிமையில் இருக்கலாம் வா.. போனில் அழைத்த காதலி”… ஹோட்டலுக்கு சென்ற காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… ஆக்ராவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தன்னைத் தொடர்ந்து மிரட்டி வந்த முன்னாள் காதலனை இளம்பெண் ஒருவர் ஓட்டல் அறைக்குள் வைத்து…

39 minutes ago

அரசியல்வாதிகளின் அறைகளுக்குள் நுழையாமல்… பெண்களால் அரசியலுக்கு வர முடியாது… பப்பு யாதவின் சர்ச்சை கருத்தால் பற்றி எரியும் அரசியல்..!!

பெண் அரசியல்வாதிகள் குறித்துப் பீகார் மாநிலம் பூர்ணியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பப்பு யாதவ் தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நாடு…

40 minutes ago

“ஈரானை விடமாட்டோம்!”: கடல்புறமாக வளைத்துப்பிடித்த அமெரிக்கா… உயிர்ச் சேதங்கள் மோசமாக இருக்கும்”… வல்லுநர்கள் எச்சரிக்கும் 2026-ன் மிகப்பெரிய வளைகுடா போர்?…!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் நாளை புதன்கிழமையுடன் முடிவுக்கு வரும் நிலையில், மத்திய கிழக்கில்…

43 minutes ago