
CINEMA
திருமணத்திற்க்கு பிறகு காதல் மனைவியுடன் நடிகர் கவின் வெளியிட்ட முதல் வீடியோ… லைக்ஸ்களை அள்ளிக் குவிக்கும் ரசிகர்கள்…
நடிகர் கவின் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை தேடி தந்தது சரவணன் மீனாட்சி சீரியல் தான். அந்த சீரியலில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட்டித் தொட்டி எல்லாம் பிரபலமானார். இன்னும் சொல்லப்போனால் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.
அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் அற்புதமாக விளையாடிய இவர் மற்றொரு பக்கம் லாஸ்ட்லியாவுடன் காதல் கொண்டார்.இவர்களின் காதல் விவகாரம் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரும்பாலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆனால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் இருவரும் பிரேக் அப் செய்து விட்டதாகவும் கூறப்பட்டது.
அதன் பிறகு கவின் சினிமாவில் பிசியாக நடிக்க தொடங்கினார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான டாடா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே கவின் கடந்த 20 ம் தேதி அவருடைய நீண்ட நாள் காதலி மோனிகா டேவிட் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் நெல்சன், பிரியங்கா மோகன், மாரி செல்வராஜ், விக்னேஷ் சிவன், புகழ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தினர். இயக்குனர் வெற்றி மாறனும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.இந்த திருமணத்திற்கு சின்னத்திரை மற்றும் பெரிய திரையுலகினர் நேரில் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில் நடிகர் கவின் தற்போது தனது சமூக வலைதளத்தில் மனைவியுடன் இருக்கும் க்யூட் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. திருமணத்திற்கு பின்னர் இருவரும் எடுத்த இந்த வீடியோவில் மணமகன் மணமகள் இருவரும் சிரித்தபடி இருக்கும் காட்சிகள் உள்ளன. தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…
View this post on Instagram