Connect with us

CINEMA

அப்பாவின் ஆசையை நிறைவேற்றி வரும் பிரபல நடிகர் மகன்… டாக்டராக இத்தனை பேருக்கு வெளிச்சம் காட்டியவரா..?

தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்ட் என்றும், வெள்ளிக்கிழமை நாயகன் என்றும் தமிழ் சினிமா ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகர் ஜெய்சங்கர். இவர் நடிகராக மட்டுமின்றி சிறந்த மனிதாபிமானமுள்ள மனிதராகவும் விளங்கியவர். ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைத்து கலைஞர்களுடனும், தொழிலாளிகளுடனும் சரிசமமாகப் பழகி தொழிலாளர்களின் நம்பிக்கை நாயகனாகவும் இருந்தவர். மேலும் குறுகிய காலத்திலேயே பல படங்களில் நடித்துப் புகழ் பெற்றார். இவர் தனது மகனை கண் மருத்துவராக்கிப் பார்க்க வேண்டும் என்ற கனவுடன் இருந்தார்.

   

தான் கண்ட கனவை நிறைவேற்றும் நோக்கில் தனது மகனை கண் மருத்துவராக்கி பின் அவரிடம் நீ படித்தது பெரிய விஷயம் கிடையாது.. ஆயிரம் கண் ஆப்ரேஷனாவது பண்ணிடுப்பா என்று வேண்டுகோள் வைத்தார்.

6 மணிக்கு வர வேண்டிய ஷூட்டிங்கிற்கு இரவு 2 மணிக்கு வந்த சரத்குமார்.. கடுப்பில் KS.ரவிக்குமார் எடுத்த அதிரடி முடிவு..

தனது அப்பாவின் கனவை வெகு சில ஆண்டுகளிலேயே நிறைவேற்றினார் ஜெய்சங்கர் மகன் டாக்டர் விஜய் சங்கர். இதுவரை அவரின் 25 வருட மருத்துவர் அனுபவத்தில் பல ஆயிரம் கண் ஆப்ரேஷன்களைச் செய்து பலருக்கும் வெளிச்சம் அளித்த இறைவனாகத் திகழ்ந்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில், “அப்பாவின் 100வது படமான “இதயம் பார்க்கிறது” என்ற படத்தில் கூட கண் பார்வை இழந்தவர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பொதுவாகவே அப்பாவுக்கு கண் தெரியாதவர்களை ரொம்பவே பிடிக்கும். அவர்களுக்காக அப்பா வெளியே தெரியாமல் நிறைய செய்திருக்கிறார்.

அதே கண் சார்ந்த துறையில் நான் மருத்துவர் என்பதால் அப்பா சினிமா துறையை சேர்ந்தவர்கள் என்பதாலும் நான் வருடத்தில் ஒருமுறை சினிமா துறையில் இருப்பவர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகம் நடத்தி வருகிறேன். இது நான் எனது தந்தைக்கு செலுத்தும் நன்றி கடன். ஜெய்சங்கரின் மறைவிற்குப் பின் அவரது பெயரில் அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார் டாக்டர் விஜய் சங்கர்.

மேலும் நடிகர் ஜெய்சங்கர் தயாரிப்பாளர்களின் நம்பிக்கைக்குரிய ஆஸ்தான ஹீரோவாகவும் விளங்கியவர். அவர் நடித்த படம் தோல்வி அடைந்தால் உடனே தன்னுடைய அடுத்த படத்திற்கும் அதே தயாரிப்பாளருக்கே கால்ஷீட் கொடுத்து சம்பளத்தையும் குறைத்துக் கொள்வாராம். திரையுலகில் ஜெய்சங்கரின் இந்த அணுகுமுறைதான் பல நடிகர்களுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கியது.

Continue Reading

More in CINEMA

To Top