#image_title
தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்களின் பட்டியலை போட்டால் அதில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தில் இருப்பார் கவுண்டமணி. 60களிலேயே சில படங்களில் துணைக் கதாபாத்திரங்களில், முகம் தெரியாத கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவுண்டமணிக்கு பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே திரைப்படம்தான் திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் இருந்து அவரை டிரிகர் செய்யும் கதாபாத்திரத்தில் கவுண்டமணி கலக்கியிருப்பார். படத்தில் அவர் சொல்லும் ‘பத்த வச்சிட்டியே பரட்ட்’ வசனம் இன்று வரை பிரபலமாக இருந்து வருகிறது.
16 வயதினிலே திரைப்படம் பெரிய ஹிட்டானதும் அடுத்தடுத்து அவருக்கான வாய்ப்புகள் உருவாகி, 80 களில் 90 களில் அவர் உச்ச நடிகரானார். 80 களில் அவர் மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்தபோது அவருக்குக் கதாநாயகனாக நடிக்க சில படங்களில் வாய்ப்புகள் வந்தன. பிறந்தேன் வளர்ந்தேன் போன்ற சில படங்களில் கதாநாயகனாக நடித்தார்.
ஆனால் அந்த படங்கள் எல்லாம் வெற்றி படங்களாக அமையவில்லை. ஆனாலும் விடாப்பிடியாக கவுண்டமணி ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடித்துள்ளார். அதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குறையும் சூழல் உருவானது.
இந்த நிலையில் கவுண்டமணீக்கு நெருக்கமான இயக்குனரான கங்கை அமரன் அவரை சமாதானப்படுத்தி கரகாட்டக்காரன் உள்ளிட்ட படங்களில் காமெடி வேடத்தில் நடிக்க வைத்துள்ளார். அந்த படங்களுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து கவுண்டமணி இனிமேல் ஹீரோ வேடமே வேண்டாம் நமக்கு காமெடியே போதும் என செகண்ட் இன்னிங்ஸில் பட்டையக் கிளப்பினார்.
அப்படி தொடங்கிய செகண்ட் இன்னிங்ஸ் 10 ஆண்டுகளுக்கு மேல் நீடித்து 2000களின் தொடக்கம் வரை அவர் முன்னணி நடிகராக வலம் வந்தார். அதன் பின்னர் உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக அவர் சினிமாவில் இருந்து விலகினார். இப்போது தன்னுடைய 72 ஆவது வயதில் ஒத்த ஓட்டு முத்தையா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத்தில் உள்ள பரபரப்பான ஆர்டிசி எக்ஸ் ரோட் ஸ்டீல் பாலப் பகுதியில், மனோஜ் என்ற இளைஞர் பாலத்தின் மேலிருந்து திடீரெனக்…
தெற்கு டெல்லியின் ஆர்கே புரம் பகுதியில் வியாழக்கிழமை இரவு அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. வேகமாக வந்த கார் ஒன்று,…
உத்தராகண்ட் மாநிலம் உத்தம் சிங் நகர் பகுதியில், கடந்த ஆகஸ்ட் 15 அன்று ஈ-ரிக்ஷா ஒன்றிற்குள் பெண் ஒருவர் ஆபத்தான…
அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மூலம் மலேசியாவில் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வரும் பாரதிதாசன் என்ற தலித் மாணவர்,…
விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்ற பெண், அங்கு இயங்கி வரும் காகித அட்டை தயாரிக்கும் தனியார் நிறுவனம்…
கணவர் வேலை காரணமாக வெளியூர் சென்றுள்ள நிலையில், வீட்டில் தனியாக இருந்த மனைவி தனது பழைய காதலனை இரகசியமாக வீட்டிற்கு…