விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. கமல்ஹாசன் அளவுக்கு நிகழ்ச்சியை எந்தவித குறையும் யாரும் சொல்லாத அளவுக்கு விஜய் சேதுபதி சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். இருந்த போதும் சில கலவையான விமர்சனங்களும் கிடைத்து வருகின்றன. இந்தப் போட்டியில் மொத்தம் 24 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது ஆறு போட்டியாளர்கள் மட்டுமே பைனலுக்குள் நுழைந்துள்ளனர். கடந்த சில வாரங்களாக டபுள் எவிக்ஷன் நடைபெற்ற வந்த நிலையில் கடந்த வாரமும் டபுள் எவிக்ஷன் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக நடந்த டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் ராயன் வெற்றி பெற்ற நேரடியாக இறுதிச்சுற்றுக்கு சென்ற நிலையில் அடுத்ததாக தீபக், அருண், முத்துக்குமரன், பவித்ரா, ஜாக்குலின், VJ விஷால் மற்றும் சௌந்தர்யா என ஏழு பேர் இந்த வாரம் எலிமினேஷனுக்கு நாமினேட் ஆகிய இருந்தனர். இந்த நிலையில் தீபக் மற்றும் அருண் இருவரும் அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து எலிமினேட் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இப்படியான நிலையில் பிக்பாஸ் டைட்டில் பட்டம் யார் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இதனிடையே பிக்பாஸ் போட்டியாளரான சௌந்தர்யா சமீபத்தில் விஷ்ணு விஜய் மீது இருக்கும் காதலை வெளிப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் நடிகர் கூல் சுரேஷ் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் டைட்டில் வெளிய போவது எங்க வீட்டு மருமகள் சௌந்தர்யா தான் என கூறியுள்ளார். எனக்கும் சௌந்தர்யாவுக்கும் என்ன உறவு என்றால் கடந்த சீசனில் என்னுடன் என்னுடைய தம்பி விஷ்ணு விஜய் இருந்தான். அவன் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு தான் சௌந்தர்யா. அப்போ எங்க வீட்டு மருமகள் தான் அந்த பொண்ணு. அதுமட்டுமல்லாமல் சௌந்தர்யா எனக்கு கொழுந்தியா. சௌந்தர்யா தான் ஜெயிக்க வேண்டும். உலக மக்கள் அனைவரும் எங்க வீட்டு மருமகளுக்கு ஓட்டு போடுங்க என்று கூல் சுரேஷ் வெளியீட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கெவின் மக்டொனால்ட், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை மையமாக வைத்து ஒரு ஆவணப்படம் எடுக்க சில…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நூர் என்ற 68 வயது மூதாட்டி, அப்பகுதியில் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து…
ஸ்விக்கி நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வரும் இளைஞர் ஒருவர், தனது கடின உழைப்பால் கிடைத்த வருமானத்தில் இருந்து சிறுகச்…
பெங்களூருவில் கடந்த 2019-ம் ஆண்டில் ஆங்கிலம் பயில வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிரோதோஷி தனகா, தான் படித்த கல்வி…
தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, தெலுங்குத் திரையுலகில் 'புஷ்பா', 'ரங்கஸ்தலம்', 'க்ஷணம்' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் முன்னணி…
ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி விம்லா…