தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் வெற்றிமாறன். இவருடைய இயக்கத்தில் அண்மையில் வெளியான விடுதலை 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் இந்த படத்தில் சூர்யா நாயகனாக நடிக்கிறார். கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். வாடிவாசல் படத்திற்கான அனிமேஷன் பணிகள் லண்டனில் நடைபெற்ற வரும் நிலையில் இந்த படத்திற்கான அறிவிப்பு கடந்த 2020 ஆம் ஆண்டு வெளிவந்தாலும் அதற்கான படப்பிடிப்பு தற்போது வரை தொடங்கவில்லை.
நடிகர் சூர்யா தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் பேட்டைக்காரன் படத்தில் பிசியாக நடித்து வருவதால் இந்த படத்தை முடித்த பிறகு தான் வாடிவாசல் படப்பிடிப்பில் பங்கேற்பார் என்று தெரிகிறது. இதன் காரணமாக தற்போது மற்றொரு மாஸ் படத்தை இயக்க வெற்றிமாறன் தயாராகி வருகிறார். கே ஜி எஃப் திரைப்படத்தை மையமாக வைத்து வெற்றிமாறன் அந்த படத்தை எடுக்க உள்ளாராம்.
அதற்கான ஸ்கிரிப்ட் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிகர் தனுஷ் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் விடுதலை படத்தை தயாரித்த எல் ரெட் குமார் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் இதற்கு முன்பு தனுஷ் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் ஆகிய நான்கு படங்களில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்த நிலையில் தற்போது இருவரும் சுமார் ஆறு வருட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் இணைய உள்ள தகவல் தமிழ் சினிமா வட்டாரத்தில் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…